அந்தப்பொண்ணு உனக்கு செட் ஆகாது.! - ஏ.எல்.விஜயின் தந்தை ஆவேசம்

சிந்து சமவெளி திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை அமலாபால். முதல் திரைப்படத்திலேயே மிகவும் கவர்ச்சியாகவும் தவறான கதாபாத்திரத்தையும தேர்ந்தெடுத்து நடித்தார். அந்த திரைப்படத்தில் மருமகள் மாமனார் இருவரிடையே  தவறான உறவை பற்றி கூறியிருக்கும். இதனால் அமலாபால் கெட்ட பெயர் வாங்கினார்.

அதன் பிறகு அவர் நடித்து வெளிவந்த மைனா திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவின் ரசிகர்களையும் அவர் பக்கம் இழுத்துக் கொண்டார். அந்தத் திரைப்படத்தில் மிக நேர்த்தியான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருப்பார். இந்த திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அவருக்கு ஒரு ரசிகர் பட்டாளமே இருந்தது.

மைனா திரைப்படத்திற்காக நடிகை அமலாபால் பல விருதுகளை பெற்றார். இது அனைத்துமே அவர் இதற்கு முன் நடித்து வெளிவந்த சிந்துசமவெளி படத்தில் அவருக்கு வாங்கிக்கொடுத்த கெட்ட பெயரை நீக்கியது.

அதன்பிறகு அவர் நடித்து வந்த அனைத்து திரைப்படங்களும் நல்ல வரவேற்ப்பை பெற்றது. குறுகிய காலகட்டத்தில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். குறிப்பாக தனுஷ் விஜய் போன்ற முன்னணி நடிகர்களுடன் அவர் நடித்து அந்த திரைப்படம் வெற்றிகரமாக ஓடியது.

தனுஷுடன் நடித்து வெளிவந்த வேலையில்லா பட்டதாரி திரைப்படம் அவருக்கு மிகுந்த ரசிகர்களை பெற்று கொடுத்தது. தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் மிகுந்த ரசிகர்களைப் பெற்ற நடிகைகளில் இவரும் ஒருவர்.

இவர் இயக்குனர் விஜயை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால் சில வருடங்களிலேயே இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு சட்டப்படி விவாகரத்து பெற்றுக் கொண்டனர். இதற்குக் காரணம் விஜயின் தந்தை திருமணத்திற்கு பிறகு அமலாபால் நடிக்கக்கூடாது என்று கூறியது எனக் கூறுகின்றனர்.

அமலா பால் தற்போது வேறு ஒரு நபரை காதலித்து வருவதாக அவர் கூறியிருந்தார். இந்நிலையில் ஏ எல் அழகப்பன் (விஜய்யின் தந்தை) சமீபத்தில் பகீர் பேட்டி ஒன்று கொடுத்திருந்தார்.

இந்தப் பேட்டியில் அவர் அந்தப் பெண் (அமலா பால்) உனக்கு செட்டாக மாட்டாள் என என் மகனிடம் அப்போதைய கூறினேன் என அவர் கூறினார். தற்போது இருவரும் விவாகரத்து பெற்றுக்கொண்டு தன் மகனுக்கு நல்ல குடும்பப்பெண் கிடைத்ததாக அவர் கூறியிருந்தார்.

இதனைப் பற்றி கவலைப்படாமல் அமலாபால் சமீபத்தில் வெளியான ஆடை திரைப்படத்தில் முழு நிர்வாணமாக நடித்து அனைத்து தரப்பினரிடையே சர்ச்சையை ஏற்படுத்தினார்.

தன் தந்தை கூறியது சரிதான் என்று ஏ எல் விஜய் இப்போது நினைக்கிறார் என்று அனைவரும் கூறுகின்றனர்.

Post a Comment

0 Comments