தர்ஷன் மீது சனம் ஷெட்டி போலீசில் புகார் - இதுதான் காரணமா?


பிக் பாஸ் 3 - இதில் கலந்து கொண்ட தொடரில் பெரும்பாலானோரால் ஆதரிக்கப்பட்டவர் நடிகர் தர்ஷன். இவர் வெற்றி பெறுவார் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென்று பிக்பாஸில் இருந்து வெளியேறினார். இவர் பல்வேறு மாடலிங் செய்துள்ளார். ஆனால் அப்போது அவருக்கு கிடைக்காத ரசிகர் பட்டாளம் பிக்பாஸில் கலந்து கொண்ட பிறகு தான் இவருக்கு கிடைத்தது.


பிக்பாஸ் வீட்டில் நடிகை ஷெரின் உடன் காதல் வயப்பட்ட தாக சர்ச்சையில் உள்ளானார். ஆனால் அவர் என்னைவிட வயதில் பெரியவர் என நடிகர் தர்ஷன் தெளிவாக கூறியிருந்தார். மேலும் தனக்கு ஏற்கனவே நிச்சயம் ஆகிவிட்டதாகவும் தன்னுடைய காதலி சனம் செட்டி எனவும் தர்ஷன் கூறியிருந்தார்.

இவ்வாறு இருக்க நடிகை சனம் செட்டி இடம் பேட்டி எடுத்த பொழுது தர்ஷன் உக்கும் எனக்கும் ஏற்கனவே நிச்சயமாகிவிட்டது என அவரும் கூறினார். மே 12ஆம் தேதி எங்களுக்கு திருமணம் எனவும் சனம் செட்டி பேட்டியில் கூறினார்.

பிக்பாஸ் மூன்று முடிந்து சில காலங்களாக இவர்களுடைய திருமணம் பற்றி எந்த ஒரு அறிவிப்பும் இல்லாத இருந்த நிலையில் தற்போது சனம் செட்டி தர்ஷன் மீது காவல் நிலையத்தில் ஒரு புகார் ஒன்றை அளித்துள்ளார். தர்ஷன் தன்னை ஏமாற்றி விட்டதாக அந்த புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.


இதனைப்பற்றி சனம் செட்டி இடம் பேட்டி எடுத்த பொழுது, தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி தன்னிடம் பல லட்சம் பெற்றுக்கொண்டு தற்போது திருமணம் செய்ய மறுக்கிறார் என கூறினார். இதற்கு காரணம் என்ன என அவருக்கும் தெரியவில்லை. எனவேதான் தர்ஷன் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தேன் என அவர் கூறினார்.

சனம் ஷெட்டி தமிழ் தெலுங்கு கன்னட போன்ற மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். பல வருடங்களாக தர்ஷன் மற்றும் சனம்  செட்டி காதலித்து வருவதாக கூறுகின்றனர். சனம் ஷெட்டிக்கும் மாடலிங் மிகவும் பிடித்தமான ஒன்று. அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவருடைய புகைப்படங்கள் மிகவும் கவர்ச்சியாக அவர் வெளியிடுகிறார்.

அதனைப் பார்த்து தர்ஷன் ரசிகர்கள் உனக்கும் தர்ஷன் அவருக்கும் செட் ஆகாது என கமெண்ட் அடித்துள்ளனர். இதனால் மனமுடைந்த சனம் செட்டி விரைவாக திருமணம் செய்து கொள்ள கட்டாயப்படுத்தி உள்ளார். ஆனால் தற்போது தர்ஷன் திருமணமே ஆகாது என கூறியிருக்கிறார்.

இதனால் சனம் ஷெட்டி காவல் நிலையத்தில் தர்ஷன் மீது புகார் அளித்துள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் சனம் ஷெட்டி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பிகினி உடையில் போட்டோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் இவ்வாறு இருந்தால் தர்ஷன் உன்னை திருமணம் செய்து கொள்ள மாட்டார் என பல ரசிகர்கள் கமெண்ட் செய்துள்ளனர். 

தர்ஷன் குடும்பத்தினருக்கும் சனம் செட்டி இவ்வாறு பிகினி உடையில் அதிகமாக போட்டோக்களை பகிர்வது பிடிக்கவில்லை என பல்வேறு தரப்பினர் கூறுகின்றனர். மேலும் பிகினி உடையில் இன்டர்வியூ ஒன்றையும் சனம் செட்டி கொடுத்திருக்கிறார். இது அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சனம் செட்டி வெளியிட்டிருக்கிறார்.


Post a Comment

0 Comments