கோவிலுக்கு போய் இந்த உடையா.? விஜே ரம்யா வீடியோவை பார்த்து வருதேடுக்கும் ரசிகர்கள்.!

சின்னத்திரை சீரியல் நடிகைகளுக்கு இணையாக தொலைக்காட்சி தொகுப்பாளினிகள் அதிகளவு பிரபலமாகி வருகின்றன. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் விஜய் தொலைக்காட்சியில் இந்த தொகுப்பாளினிகள் ஆன டிடி ரம்யா பாவனா மிகவும் பிரபலமானவர்கள். 

இவர்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. தன்னுடைய நேர்த்தியான நடிப்பாலும் முகபாவனைகளும் தன்னுடைய ரசிகர்களை எப்பொழுதும் அவர்கள் பக்கம் வைத்திருப்பார்கள்.

விஜய் தொலைக்காட்சி மட்டுமல்லாமல் பல்வேறு தொலைக்காட்சிகளிலும் தொகுப்பாளினியாக பணியாற்றி வருபவர் தான் ரம்யா. இவர் தற்போது பல்வேறு இசை நிகழ்ச்சிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் பாடல் வெளியீட்டு விழா போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக பணியாற்றி வருகிறார். மேலும் பல்வேறு கல்லூரிகளுக்கும் சிறப்பு விருந்தினராக சென்றிருக்கிறார்.

கலக்கப்போவது யாரு உங்களில் யார் அடுத்த பிரபுதேவா நம்ம வீட்டு கல்யாணம் கில்லாடிகள் ஆகிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியிருந்தார்.2014 ஆம் ஆண்டு அஜித் ஜெயராம் என்பவருடன் காதல் திருமணம் செய்து கொண்டார். 

ஆனால் திருமணமாகி ஒருவருடத்தில் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று இருக்கும். இதற்கு காரணம் திருமணத்திற்கு பிறகு எந்த ஒரு நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள மாட்டேன் என ரம்யா கூறியிருந்தார் ஆனால் திருமணத்திற்குப் பின் பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் தொகுப்பாளினி ஆகவே பணியாற்றி வந்தார்.

மேலும் இவர் மொழி திரைப்படத்தில் ஜோதிகாவிற்கு துணை நடிகையாகவும், மங்காத்தா மாசிலாமணி ஆகிய திரைப்படங்களிலும் துணை நடிகையாக நடித்திருந்தார். இவருக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் உள்ளது என்பதற்கு ஏற்றவாறு அடிக்கடி கோயிலுக்கு செல்வது வழக்கம்.

சமீபத்தில் அவர் சென்று இருந்த கோவில் ஒன்றில் சிட்டுக்குருவிகளை பிடித்து அதனிடம் தனது பிரார்த்தனையை கூறி வானில் பறக்க விட்டார். அப்பொழுது அவர் மிகவும் குட்டையான ஆடையை அணிந்திருந்தார். முழு தொடையும் தெரியும் அளவிற்கு மிகவும் குட்டையான ஆடை அணிந்திருந்தார். 

இதனைப் பார்த்த ரசிகர்கள் கோவிலுக்கு இவ்வாறுதான் ஆடை அணிந்து செல்வீர்களா என்று கேள்வி கேட்டுள்ளனர். மேலும் பேண்ட்  எங்கே என்றும் அவரைப் பார்த்து கிண்டல் அடித்துள்ளனர்.


Post a Comment

0 Comments