9 மாவட்டங்களுக்கு விரைவில் உள்ளாட்சி தேர்தல்! தேர்தல் ஆணையர்கள் நியமனம்.


உள்ளாட்சி தேர்தல் நிறுத்தப்பட்டு இருக்கும் 9 மாவட்டங்களுக்கு தேர்தல் அதிகாரிகளை நியமித்து தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளதால் விரைவில் தேர்தல் தேதி வெளியாக வாய்ப்பு உள்ளது. 

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதை தொடர்ந்து புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்கள் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்துவதற்கான பணிகளை மாநில தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, நெல்லை மற்றும் தென்காசி ஆகியவையே தேர்தல் நடக்காத மாவட்டங்கள் ஆகும். அவற்றிற்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்களே மாவட்ட தேர்தல் அதிகாரிகளாக செயல்படுவார்கள் என்று மாநில தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. 

இந்த நிலையில் 9 மாவட்டங்களுக்கு விரைவில் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

அதோடு கடந்த தேர்தலில் ஒத்திவைக்கப்பட்ட இடங்களுக்கும் 9 மாவட்டங்களோடு சேர்த்து தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளது. மேலும் நகர்ப்புற உள்ளாட்சி பதவிகளுக்கு எப்போது தேர்தல் என்பதும் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.

Post a Comment

0 Comments