நெல்லிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!(Gooseberry Benefits in tamil)


Gooseberry Benefits in tamil
Gooseberry benefits in Tamil
இயற்கையின் படைப்பில் காய்களும், கனிகளும் நமக்கு வரப்பிரசாதமாக உள்ளன. இதில் நெல்லிக்காயில் ஏராளமான நன்மைகள் உள்ளன. என்றும் இளமை தோற்றம் நெல்லிக்கனிகளை அதிகம் சாப்பிட்டு வருபவர்களுக்கு உண்டு. ஆம்.. தோலில் உள்ள செல்கள் புத்துணர்வு பெற்று, ரத்த ஓட்டத்தை நன்கு தூண்டி தோலில் சுருக்கங்கள் போன்றவை ஏற்படுவதை தடுக்கிறது நெல்லிக்காய்.

வைட்டமின் சி 

இதில் வைட்டமின் சி சத்து என்பது மேனிக்கு இலகுவான தன்மையை தருவதோடு தோல் புற்று நோய்கள் ஏற்படாமலும் காக்கிறது. குறைந்தபட்சம் வாரத்திற்கு ஒரு முறை நெல்லிக்காய் சாப்பிடுவதால் முகப்பொலிவு, பளப்பான சருமம் ஆகியவற்றை பெறலாம். (Gooseberry Benefits in tamil)
Gooseberry benefits in Tamil
Gooseberry benefits in Tamil
இதயத்தின் செயல்பாடுகள் எப்போதும் சீராக இருக்கின்ற வகையில் உதவக்கூடிய இயற்கை உணவுகள் அதிகம் சாப்பிட வேண்டும். நெல்லிக்கனிகளை அடிக்கடி சாப்பிடும் போது அதிலுள்ள புளிப்பு தன்மை கொண்ட ரசாயனங்கள், இதயத்தில் ரத்தம் உறைதல், அடைப்பு போன்றவை ஏற்படுவதை தடுக்கிறது.

குரோமியம் சத்து

இதில் உள்ள குரோமியம் சத்து ஆர்த்திராஸ் கிலேரோசிஸ் எனப்படும் இதயம் சம்பந்தமான பாதிப்புகளை உண்டாக்காமல் பாதுகாக்கிறது. சிலருக்கு சிறுநீர் வெளியேறுவதில் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. நீர்ச்சத்து அதிகம் நிறைந்த நெல்லிக்கனி இயற்கையிலேயே ஒரு சிறந்த சிறுநீர் பெருக்கியாக இருக்கிறது. 

வைட்டமின் ஏ

மேலும் நெல்லிக்கனியில் இருக்கின்ற சாற்றுக்கு சிறுநீரகங்களில் படிகின்ற சிட்ரேட் மற்றும் கால்சியம் படிமங்கள் கற்களாக மாறுவதை தடுத்து, அவைகளை கரைத்து சிறுநீர் வழியாக வெளியேற்றுகிறது. நெல்லிக்காயில் வைட்டமின் ஏ சத்து அதிகம் நிறைந்துள்ளது.(Gooseberry Benefits in tamil)
Gooseberry benefits in Tamil
Gooseberry benefits in Tamil
இந்த வைட்டமின் ஏ சத்து நமது கண்களில் விழி படலங்களில் ஏற்படும் அழுத்தங்களை குறைத்து எதிர்காலங்களில் கண்புரை, கண் அழுத்தம் போன்ற குறைபாடுகள் ஏற்படாமல் காக்கிறது. இதை அடிக்கடி உண்பவர்களுக்கு வயதாவதால் ஏற்படும் கண்பார்வை குறைபாடுகள் நீங்கும். கண்பார்வை தெளிவும் ஏற்படுகிறது. 

எலும்புகள் வலிமையடைகிறது

எலும்புகள் நம் வாழ்நாளின் இறுதிவரை நமது உடலில் வலுவாக இருக்க வேண்டியது எலும்புகள். நெல்லிக்கனியில் எலும்பின் வளர்ச்சிக்கும், வலுவிற்கும் தேவையான வைட்டமின்கள் மற்றும் பொட்டாசியம், கால்சியம் சத்துகளும் அதிகம் இருக்கின்றன.(Gooseberry Benefits in tamil)

எனவே வாரத்தில் குறைந்தபட்சம் இரண்டு முறையாவது நெல்லிக்காய்களை சாப்பிடுபவர்களுக்கு எலும்புகள் வலிமையடைகிறது. குறிப்பாக வயதானவர்கள் மற்றும் குழந்தைகள் நெல்லிக்காய்களை உண்பது அவர்களின் எலும்புகளின் ஆரோக்கியமான நிலைக்கு நல்லதாகும். 

முடிவளர்ச்சிக்கு

முடிகொட்டுதல் தலைமுடி உடலின் ஆரோக்கியத்தை மட்டும் குறிப்பதில்லை, தலையை வெளிப்புற சூழல்களிலிருந்தும் பாதுகாக்கவும் செய்கிறது. முகத்திற்கு அழகையும் கொடுக்கிறது. 
Gooseberry benefits in Tamil
Gooseberry benefits in Tamil
முடிவளர்ச்சிக்கு தேவையான சத்துக்களும், வேதிப்பொருட்களும் நெல்லிக்கனிகளில் நிறைந்துள்ளன. குறிப்பாக இதில் இருக்கும் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி சத்துகள் தலைமுடி வேர்களை வலுப்படுத்தி முடி கொட்டுவதை குறைக்கிறது. (Gooseberry Benefits in tamil)


மேலும் ஏற்கனவே முடி உதிர்ந்த இடங்களில் மீண்டும் தலைமுடியின் வளர்ச்சியை தூண்டும் பணியையும் செய்கிறது. எனவே நெல்லிக்காய்களை தொடர்ந்து உண்பவர்களுக்கு முடிகொட்டும் பிரச்சினை குறைகிறது. 

உடலுக்கு நன்மை

மஞ்சள் காமாலை நாம் தினமும் சாப்பிடும் அனைத்து வகையான உணவுகளிலும் ஏதாவது ஒரு நச்சுத்தன்மை வாய்ந்த பொருளின் கலப்படம் சிறிது உள்ளது என்பது மறுக்க இயலாத உண்மை. அத்தகைய நச்சுக்கள் நிறைந்த உணவை நாம் சாப்பிட்டாலும் அவற்றை நீக்கி உடலுக்கு நன்மையை ஏற்படுத்தும் ஒரு உறுப்பாக கல்லீரல் செயல்படுகிறது. ஒருவருக்கு அத்தகைய பித்தப்பை ஆரோக்கியமாக இருப்பது அவசியமாகும்.

நோய் எதிர்ப்பு சக்தி

நெல்லிக்கனிகளில் இருக்கும் ரசாயனம் பித்தப்பைகளில் கற்கள் உருவாகாமல் தடுக்கிறது. மேலும் பித்தப்பை சிறப்பாக செயல்படவும் உதவுகிறது. 

நெல்லிக்கனியை தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வருபவர்களுக்கு ரத்தத்தில் இருக்கும் கழிவு பொருட்கள் வியர்வை மற்றும் சிறுநீர் வழியாக வெளியேறி, ரத்தத்தை தூய்மை செய்து உடலில் சுறுசுறுப்பை அதிகரிக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது.

அஜீரண கோளாறுகள்

உணவு உண்ணும்போது கவனம் செலுத்தவில்லை என்றால், வயிற்றில் புண்கள் அஜீரண கோளாறுகள் போன்றவை ஏற்படுகின்றன. நெல்லிக்காய்களை தினமும் சாப்பிட்டு வருவதால் வயிற்று புண்கள் மற்றும் வயிறு சம்பந்தமான பல பிரச்சினைகளும் நீங்கும். (Gooseberry Benefits in tamil)

மேலும் நெல்லிக்கனியில் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்தும் பல ரசாயனங்களும், வேதிப்பொருட்களும் உள்ளன என்று மருத்துவ வல்லுனர்கள் கூறுகின்றனர். ஆகவே நலமுடன் வாழ நாம் அனைவரும் நெல்லிக்காயை உண்ணலாமே.

Post a Comment

0 Comments