ஐபில் நடக்குமா? கொரோன வைரஸ் பரவுவதால் தடையாகும் என அதிர்ச்சி தகவல்!

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. சீனாவில் இருந்து பரவ தொடங்கிய இந்த கொடிய வைரஸ் உலகம் முழுவதும் உயிர்பலி வாங்கி வருகிறது. சீனாவில் மட்டும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதிலும் கிட்டதட்ட  90 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

கொரோனா வைரஸ், சீனாவுக்கு வெளியே 17 மடங்கு வேகமாக பரவுவதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. 

மொத்தம் 85 நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியுள்ளது. இந்தியாவில் மட்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 31 ஆக  உள்ளது.  வெளிநாடுகளிலிருந்து வருவோர் மூலம் கொரோனா பரவுவதால், சீனா, இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு பயண தடை விதிக்கப்பட்டுள்ளது. 

கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் வகையில், பொது இடங்களில் மக்கள் கூட வேண்டாம் என்று மத்திய சுகாதாரத்து மற்றும் குடும்ப நல அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. தவிர்க்க முடியாத நிகழ்ச்சிகளின் போது போதுமான முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும் எனவும் சுகாதாரத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. 

ஐபிஎல் நடக்குமா?

இத்தகைய சூழலில், இந்திய கிரிக்கெட் வாரியத்தால் நடத்தப்படும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடப்பு ஆண்டு திட்டமிட்ட படி நடக்குமா? என்று சந்தேகங்கள் எழுந்துள்ளன. ஏனெனில், ஐபிஎல் போட்டிகளைக் காண ஆயிரக்கணக்கில் ரசிகர்கள் மைதானத்தில் திரள்வார்கள்.

அதுபோக, வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்கள், பயிற்சியாளர்கள் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க வருவார்கள். எனவே, போதுமான முன்னெச்சரிக்கைகளுடன் ஐபிஎல் போட்டிகள் நடத்த வேண்டியது அவசியம்.

இந்த நிலையில், ஐபிஎல் போட்டிகள் நிச்சயம் நடக்கும் என்று தெரிவித்துள்ள பிசிசிஐ தலைவர் கங்குலி, ”முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளுடன் ஐபிஎல் நடக்கும்” என்றார். 

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக  இத்தாலியில் சீரி ஏ கால்பந்து போட்டிகள் ரசிகர்கள் இல்லாமலேயே மூடப்பட்ட கதவுகளுக்குள் நடைபெற்று வருகின்றன. அதேபோல்,  வரும் ஜூலை 4 ஆம் தேதி தொடங்க உள்ள ஜப்பான் ஒலிம்பிக் போட்டிகள் திட்டமிட்டபடி  நடக்குமா? என்பதும் விவாதத்திற்குள்ளாகியுள்ளது. 

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் வரும் 29 ஆம் தேதி தொடங்கி  மே 24 ஆம் தேதி வரை நடைபெற உள்ளன.

Post a Comment

0 Comments