வந்துவிட்டது லாவா ஏ 1 மொபைல்! ரூ 999 மட்டுமே!


இந்திய மொபைல் போன் பிராண்டான லாவா ஹோலி பண்டிகையை முன்னிட்டு ஸ்பெஷல் எடிஷன் மொபைல் போனினை அறிமுகம் செய்துள்ளது. புதிய மொபைல் லாவா ஏ1 கலர்ஸ் எனும் பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.பாலிகார்பனைட் பாடி, இன்ஸ்டண்ட் டார்ச், ஆட்டோ கால் ரெக்கார்டிங் மற்றும் பல்வேறு இதர அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. சிறப்பம்சங்களை பொருத்தவரை 1.8 இன்ச் டி.எஃப்.டி. டிஸ்ப்ளே, 128x160 பிக்சல் ரெசல்யூஷன், 0.3 எம்.பி. கேமரா, 800 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.


இந்த பேட்டரி மூன்று நாட்களுக்கு பேக்கப் வழங்கும் என லாவா தெரிவித்துள்ளது. இந்த மொபைலில் உள்ள டார்ச்சினை நேவிகேஷன் பட்டனை க்ளிக் செய்து ஆன் செய்யலாம். இத்துடன் காண்டாக்ட்களில் புகைப்படம் செட் செய்து கொள்ளும் வசதி, கால்குலேட்டர், ஸ்டாப்வாட்ச், காலெண்டர், அலாரம் போன்ற வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும் இந்த மொபைலை ஆங்கிலம் உள்பட தமிழ், தெலுங்கு, கன்னடா, இந்தி, பஞ்சாபி மற்றும் குஜராத்தி என ஏழு மொழிகளில் இயக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது. லாவா ஏ1 கலர்ஸ் லைட் புளூ, கிரீன் மற்றும் மெஜன்டா ரெட் என மூன்று நிறங்களில் கிடைக்கிறது.

இந்தியாவில் லாவா ஏ1 கலர்ஸ் விலை ரூ. 999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த மொபைலை வாங்குவோருக்கு நாடு முழுக்க ஆஃப்லைன் ஸ்டோர்களில் ஒரு வருடத்திற்கு ரீபிளேஸ்மென்ட் வாரண்டி வழங்கப்படுகிறது.

Post a Comment

0 Comments