யெஸ் பேங்க் வாடிக்கையாளர்களின் பணம் பத்திரமாக உள்ளது! நிர்மலா சீதாராமன் அறிவிப்பு.

யெஸ் பேங்க் அதிகமான கடன்களை வழங்கியதால் வாரா கடன் பெருகியது இதனால் மூலதன நெருக்கடியில் உள்ளது. இதைத்தொடர்ந்து ரிசர்வ் வங்கி நேற்று யெஸ் வங்கிக்கு சில காலம் கடன்கள் வழங்குவதை நிறுத்திவைக்கும்படி கட்டுப்பாடு விதித்தது.

ஒரு வங்கி கணக்கில் இருந்து ரூ.50 ஆயிரம் மட்டுமே எடுக்க வேண்டும் என்றும் மறு உத்தரவு வரும்வரை இந்த கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. வங்கியின் நிர்வாகத்தையும் உடனடியாக மாற்றி அமைக்கவும் உத்தரவிட்டது.


இந்த நிலையில் யெஸ் பேங்க்கின்  ஒவ்வொரு வாடிக்கையாளர்களின் பணமும் பாதுகாப்பாக உள்ளது  என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று உறுதி அளித்தார்.

இதுகுறித்து  மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது:-

யெஸ் பேங்கின் ஒவ்வொரு வாடிக்கையாளர்களின் பணமும் பாதுகாப்பாக இருக்கும் என்று நான் உறுதியளிக்க விரும்புகிறேன். உங்களின் பணம் பாதுகாப்பானது, நான் இந்திய ரிசர்வ் வங்கியுடன் தொடர்ந்து தொடர்பு கொண்டு பேசிவருகிறேன். எந்தவொரு வாடிகையாளருக்கும்  எந்த இழப்பும் ஏற்படாது என்று ரிசர்வ் வங்கி கவர்னர்  எனக்கு உறுதியளித்துள்ளார்

இந்த விவகாரத்தை மத்திய வங்கி முழுமையாகப் எடுத்து கொண்டு விரைவான தீர்மானத்தை தருவதாக உறுதியளித்துள்ளது. எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் வாடிக்கையாளர்கள், வங்கிகள் மற்றும் பொருளாதாரத்தின் நலனுக்காகவே என கூறி உள்ளார். 

Post a Comment

0 Comments