அடுத்த
ஆண்டு நடக்க உள்ள, சட்டசபை
தேர்தலில், அதிமுக முதல்வர் வேட்பாளர்
யார் என தெரிவிக்காத நிலையில்,
அக்கட்சியின் நிகழ்ச்சியில் பேசிய, இலக்கிய அணி
செயலர் வளர்மதி, நிரந்தர முதல்வர் பழனிசாமி
என கூறியது ஆச்சரியத்தை ஏற்படுத்தி
உள்ளது.
அ.தி.மு.க.,
இலக்கிய அணி சார்பில், 'சொல்வோம்
வெல்வோம்' என்ற பெயரில், அ.தி.மு.க.,
பேச்சாளர்களுக்கான, சிறப்பு பயிற்சி பட்டறை,
சென்னையில் நடந்தது. இதில் முதல்வர் பழனிசாமி,
துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்
ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில்,
முதல்வர் பழனிசாமி, 'அடுத்த ஆண்டு நடக்க
உள்ள, சட்டசபை தேர்தலில் வெற்றி
பெற்று, ஆட்சி தொடர, அ.தி.மு.க.,
பேச்சாளர்கள், அர்ப்பணிப்போடு செயல்பட வேண்டும்,' என்றார்.
துணை முதல்வர் பன்னீர் செல்வம் பேசுகையில்,
'சிறுபான்மையினரிடம், தி.மு.க.,
உள்ளிட்ட கட்சிகள், தவறான பிரசாரம் செய்கின்றன.
அதை தடுத்து நிறுத்தும் சக்தியாக,
பேச்சாளர்கள் திகழ வேண்டும்.' என்றார்.
இதையும் படிக்க :படு கவர்ச்சியான உடையில் டிடி
நிகழ்ச்சியில்,
முன்னாள் அமைச்சரும், இலக்கிய அணி செயலருமான
வளர்மதி பேசுகையில், ''நிரந்தர முதல்வர், பழனிசாமி
மீண்டும் ஆட்சி கட்டிலில் அமர,
நமது பிரசார பயணம், வலுவாக
அமைய வேண்டும்,'' என்றார்.
அடுத்து
வரும் சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க.,வின், முதல்வர் வேட்பாளர்
யார் என்பது, அறிவிக்கப்படாத நிலையில்,
பழனிசாமியை நிரந்தர முதல்வர் என,
வளர்மதி கூறியது, ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
பயிற்சி
பட்டறை நடந்த, திருமண மண்டபம்
முழுவதும், பழனிசாமி துவக்கி வைத்த, அரசு
திட்டங்கள் குறித்த, பதாகைகள் இடம் பெற்றிருந்தன. கட்சி
ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான பன்னீர்செல்வம்
படம் இடம் பெறவில்லை. இலக்கிய
அணி சார்பில் வெளியிடப்பட்ட, 'சிடி'யில் இடம்
பெற்ற பாடல்களும், முதல்வர் புகழ் மட்டுமே பாடின.
0 Comments