தரமான சம்பவம் வலிமை படத்தில் இருக்கு! தல ரசிகர்கள் இப்போதே கொண்டாட்டம்.


ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் வலிமை படப்பிடிபப்பு சத்தமில்லாமல் நடந்து கொண்டிருக்கிறது. 65 சதவீத காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளனவாம். இந்நிலையில் சென்னை மீஞ்சூர் அவுட்டர் ரிங் ரோட்டில் ஸ்டண்ட் காட்சியை ஷூட் செய்துள்ளார் வினோத்.
Valimai Flim
Valimai Flim
அந்த காட்சிக்காக கார், சூப்பர் பைக் மற்றும் டியூக் பைக்குகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. படப்பிடிப்பு தளத்தில் பைக்குகள் வரிசையாக நின்றபோது எடுத்த புகைப்படம் வெளியாகியுள்ளது. 

அதை பார்த்த அஜித் ரசிகர்களோ, செமயான சேசிங் காட்சி இருக்கு, நமக்கு நல்ல என்டர்டெயின்மென்ட் இருக்கு என்று தெரிவித்துள்ளனர்.

வலிமை படத்தில் கார் மற்றும் பைக் ரேஸ் காட்சிகள் இருக்கும் என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்ட நிலையில் இந்த காட்சியை படமாக்கியுள்ளனர். முன்னதாக சென்னையில் நடந்த ஷூட்டிங்கில் அஜித் பைக்கில் இருந்து கீழே விழுந்து காயம் அடைந்தார் என்று தகவல் வெளியானது.


அதற்கு பிறகு அஜித் சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் நடந்த திருமணத்திற்கு ஸ்டைலாக வந்ததை பார்த்த பிறகு தான் ரசிகர்கள் நிம்மதி அடைந்தனர். தல தலைக்கு டை அடித்து பெப்பர் லுக்கில் இருப்பது ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.

வலிமை படத்தில் அஜித்துக்கு ஒன்றல்ல, இரண்டு அல்ல மூன்று வில்லன்களாம். என்ன, படம் குறித்து தயாரிப்பாளர் போனி கபூர் எந்த அப்டேட்டும் கொடுப்பதே இல்லை. அதனால் அவர் மீது அஜித் ரசிகர்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.


Post a Comment

0 Comments