பி.இ. பட்டதாரிகளுக்கு ஒரு அறிய வாய்ப்பு! ஆண்டுக்கு 7 லட்சம் ஊதியம்.


மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனங்களில் ஒன்றான Hindustan Urvarak & Rasayan Limited (HURL) நிறுவனத்தில் காலியாக உள்ள பொறியாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது

மொத்தம் 90 காலிப் பணியிடங்கள் உள்ள நிலையில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங், எலெக்ட்ரானிக்ஸ் படித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

இதையும் படிக்க: பட வாய்ப்பிற்காக நீச்சல் உடையில் கீர்த்தி சுரேஷ்!

நிர்வாகம் : Hindustan Urvarak & Rasayan Limited (HURL)
மேலாண்மை : மத்திய அரசு
மொத்த காலிப் பணியிடங்கள் : 90

காலிப் பணியிட விபரங்கள்:

கெமிக்கல் இன்ஜனியர் - 38
மெக்கானிக்கல் இன்ஜினியரிங் - 25
எலெக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் - 15
இன்ஸ்ட்ரூமென்டேஷன் இன்ஜினியரிங் - 12

கல்வித் தகுதி :

மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அந்தந்த துறையில் பி., பி.டெக், பி.எஸ்.சி இன்ஜினியரிங் முடித்திருக்க வேண்டும்.

தேர்வு முறை

கேட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, இன்ஜினியரிங் படிப்போடு, 2019 கேட் தேர்வும் எழுதியிருக்க வேண்டும். கேட் 2019 தேர்வு மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

அதற்கு முந்தைய கேட் தேர்வு எழுதியவர்கள் விண்ணப்பிக்க முடியாது.

ஊதியம் : HURL Engineer Recruitment 2020 பணிகளுக்கு ஆண்டுக்கு 7 லட்சம் ரூபாய் ஊதியமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட பணியிடத்தில் சேர தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.hurl.net.in என்னும் இணையதளத்தில் விண்ணப்பம் பெற்று, அதனைப் பூர்த்தி செய்து மார்ச் 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் 


என்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

Post a Comment

0 Comments