ஆரோக்கியமான சருமத்திற்கும் வறண்ட சருமத்தை சாப்ட் ஆகா மாற்றவும் இதனை பின்பற்றுங்கள் போதும்! beauty tips in tamil for dry skin)


ஆரோக்கியமாகவும் பளபளப்பாகவும் சருமத்தை வைத்துக் கொள்ள வேண்டும் என்று அனைத்து பெண்களுக்கும் ஆசை உண்டு. மிக முக்கியமாக கல்லூரிக்கு செல்லும் பெண்கள் இதை மிக அவசியமாக கருதுகின்றனர். ஏனெனில் அவர்கள் மற்றவர்களை விட அழகாகவும் தனித்துவமாகவும் தெரிய வேண்டுமென்று விரும்புகின்றனர். 


இயற்கையான சரும பராமரிப்பு என்பது பெண்களிடையே பெரும் முக்கியத்துவத்தை பெற்றுள்ளது. இவற்றை இயற்கையான முறையில் பெற விரும்பும் பெண்கள், இயற்கை மூலிகைகளை பயன்படுத்துவதில் பெரும் ஆர்வம் காட்டுகின்றனர்.


மேலும் இதையே முதன்மையாக தேர்ந்தெடுத்து, தங்களை அழகுபடுத்திக் கொண்டு மற்றவர்கள் முன்னே ஒரு நல்ல படைப்பாக இருக்க விரும்புகின்றனர். உங்களுக்கு பல சந்தேகங்கள் இருக்கலாம். அதாவது இலையைக் கொண்டு சருமத்தை எப்படி அழகுபடுத்த முடியும் என்ற எண்ணமும் ஏற்படலாம். 

அது முடியுமா என்றால் முடியும் என்பதே பதிலாகும். மற்றும் பல அருமையான மூலிகைகளை கொண்டு அற்புதமான பளபளப்பையும் அழகையும் எந்தவிதமான பக்க விளைவுகளுமின்றி பெற முடியும். சில மிகுந்த பலன் தரக்கூடிய இயற்கை மூலிகைகள் இதோ!

1. வேப்பிலை

இருக்கும் அனைத்து இலைகளைக் காட்டிலும் வேப்பிலையையே மிக சிறந்த இயற்கை மூலிகையாக கருதுகின்றனர். இது பளபளக்கும் சருமத்தை தரக்கூடிய மூலிகையாகும். 

பொடி செய்த வேப்பிலையுடன் ரோஜா இதழ்களை கசக்கி அதில் எலுமிச்சை சாற்றை கலந்து ஒரு கலவையாக செய்து சருமத்தில் தேய்த்து வந்தால் தோலில் ஒரு அற்புத பளபளப்பு உண்டாகும்.

2. வெண்ணெய் பழம்

வெண்ணெய் பழம் என்று கூறப்படும் அவகேடோ இயற்கையாக தோலில் பளபளப்பை ஏற்படுத்துவதாகவும், வறண்ட சருமம் தொடர்பான பிரச்சனைகளையும் தீர்க்கக் கூடிய பழமாகவும் உள்ளது. 

இப்பழத்தில் அதிக அளவு புரதச் சத்து இருப்பதால் தோலில் ஏற்படும் சேதங்களை குணமாக்க வல்லது.

3. மஞ்சள்

மஞ்சள் இயற்கையான சரும பாதுகாப்பு மற்றும் பளிச்சென்ற சருமத்தை தரும் சக்தியை கொண்டுள்ளது. வீக்கத்தை குறைக்கும் சக்தியும் பூஞ்சைகளை எதிர்க்கும் சக்தியும் மஞ்சளில் இயற்கையாவே அமைந்திருக்கின்றது. 

பருக்கள், அரிப்புகள் மற்றும் பருக்களால் உருவாகும் நிறமிகள் ஆகியவற்றை மஞ்சள் நீக்க வல்லது.

4. கற்றாழை

கற்றாழை நமது தோலை ஆரோக்கியமாகவும் பளபளப்பாகவும் வைக்க உதவும் தாவரமாகும். எரிச்சலைக் குறைக்கும் சக்தியும் குணமாக்கும் சக்தியும் கற்றாழைக்கு உண்டு. இந்த குணாதிசயத்தை கொண்ட கற்றாழை வெளிப்புற தோலில் ஏற்படும் எரிச்சலைக் குறைக்கும் பெரும் பணியையும் செய்யும் திறன் கொண்டுள்ளது.

5. பாதாம் இலைகள்

பாதாம் இலைகளிலிருந்து எடுக்கப்படும் எண்ணையும் அற்புத குணங்கள் உடையவை. இவை தோலை ஈரப்பதமூட்டுவதிலும், பளபளப்பாக்குவதிலும் சிறந்த பணி செய்யும் இலைகளாகும். பொதுவாகவே குளிர்காலத்தில் உபயோகப்படுத்தும் அழகு சாதன பொருட்களில் சேர்க்கப்படுகின்றன.

6 .துளசி

துளசி இலையில் இருக்கும் பாதுகாப்பு தடுப்பு சக்தி கண்ணின் கருவளையங்கள், பருக்கள் ஆகியவற்றை தடுக்கும் வல்லமையை கொண்டுள்ளது. மேற்குறிப்பிட்டுள்ள இயற்கை மூலிகைகள் தான் சருமத்திற்கு அழகையும், 

இயற்கையான ஆரோக்கியத்தையும் அளிக்க வல்லதாக இருக்கின்றன. உங்கள் சருமத்திற்கு ஏற்ற மூலிகையைப் பயன்படுத்தி வித்தியாசத்தை காணுங்கள்.

Post a Comment

0 Comments