கேரளாவில் பரவும் பறவைக் காய்ச்சல்! தமிழக எல்லையில் பாதுகாப்பு

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல் இருப்பது உறுதியானதை அடுத்து அங்கு உள்ள கோழிப்பண்ணைகளில் இருக்கும் கோழிகளை அழிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதையொட்டி, கோவை மாவட்டத்தில் உள்ள தமிழக- கேரள எல்லையான வாளையாறு, பொள்ளாச்சி உட்பட 12 வழித்தடங்களில் கால்நடைத்துறை சார்பில் கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் மீது நோய் தடுப்பு மருந்துகள் தெளிக்கப்படுகின்றன.

மேலும் கேரளாவில் இருந்து கோழி, வாத்து உள்ளிட்ட பறவைகள், முட்டை, கோழித் தீவனம் ஏற்றி வரும் வாகனங்கள் கோவை மாவட்ட எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டு, திருப்பி அனுப்பப்படுகின்றன.


தென்காசி மாவட்டம் புளியரை சோதனைச் சாவடியிலும் பறவைக் காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்திற்கு வரும் அனைத்து வாகனங்களுக்கும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டுவருகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் தமிழக-கேரள எல்லையான படந்தாலுமூடு சோதனைச்சாவடியிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. நீலகிரிக்கு அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருவதால், கூடலூரில் இருந்து கேரளா செல்லும் 8 சோதனைச்சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது

Post a Comment

0 Comments