பயங்கரமான
டெக்னிக்குடன்தான் பாஜக காய் நகர்த்தி
வருவது போல தெரிகிறது. 2021 சட்டசபைத்
தேர்தலுக்குப் பிறகு அதிமுகவுடன் இணைந்து
கூட்டணி ஆட்சி அமைக்க அது
நெருக்கி வருவதாக கூறப்படுகிறது.
முதலில்கூட்டணி
ஆட்சி.. பின்னர் அதையே தனது
ஆட்சியாக மாற்றும் திட்டம் இதில் இருக்கலாம்
எனக் கூறப்படுகிறது. 2021 சட்டசபை தேர்தலில் எப்படியும்
நாம் தான் ஜெயிப்போம் என்ற
அதீத நம்பிக்கையில் திமுக உள்ளது.
மக்களிடம்
அதிமுகவிற்கு எதிராக அடுத்த ஒரு
வருடத்தில் பல விஷயங்களை கொண்டு
போய் சேர்க்க பிரசாந்த் கிஷோர்
இருக்கிறார் என்று அதிமுகவுற்கு எதிராக
துல்லிய தாக்குதலுக்கு ஆயத்தமாகி வருகிறது திமுக.
அதேநேரம் ஆளும்
கட்சியான அதிமுக 2021 சட்டசபை தேர்தலை சந்திக்க
ஜெயலலிதா பாணியில் மக்கள் நல திட்டங்களை
கையில் எடுத்துள்ளது. இதுவரை இல்லாத அளவாக
அம்மா உணவகம் பக்கம் அதிமுக
கவனம் செலுத்த தொடங்கி உள்ளது.
அதற்கு 100 கோடி ஒதுக்கி பணிகளை
அதிமுக அரசு துரிதப்படுத்திஉள்ளது.
இதையும் படிக்க: பட வாய்ப்பிற்காக நீச்சல் உடையில் கீர்த்தி சுரேஷ்!
ஏழை மற்றும்
சாமானிய மக்களை கவர முடியும்
என்று எடப்பாடியார் நம்புகிறார். அத்துடன் பல மக்கள் நல
திட்டங்களை அடுத்த ஓராண்டில் மக்களுக்கு
உடனே கொண்டு போய் சேர்க்க
அதிரடி திட்டங்களை வகுத்து வருகிறார்.
கூட்டணி
ஆட்சி
இது ஒருபுறம் எனில்
2011 சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி எப்படி திமுகவை
நெருக்கி அதிக சீட்டுகளை பெற்றதோ
அதே பாணியில் 2021 சட்டசபை தேர்தலில் அதிமுகவை
நெருக்கி அதிக சீட்டுகளை பெற
பாஜக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 2021 சட்டசபை தேர்தலில் வெற்றி
பெற்று அதிமுக பாஜக கூட்டணி
ஆட்சி அமைய வேண்டும் என
பாஜக விரும்புகிறது
பாஜக அங்கம் வகிக்கும்
முன்னாள்
மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், தமிழக
பாஜக மேலிட பொறுப்பாளர் முரளிதர்ராவ்
ஆகியோர் நேற்று காஞ்சிபுரத்தில் ஸ்ரீகாமாட்சி
அம்மனை தரிசனம் செய்தார்கள்.
அப்போது
பேசிய பொன் ராதாகிருஷ்ணன், தமிழகத்தில்
2021 தேர்தலில் பாஜக அங்கம் வகிக்க
கூடிய கூட்டணி அரசு தான்
அமைய வேண்டும் என்பதில் மிகத் தெளிவாக இருக்கிறோம்..
மக்களும் அதைத்தான் விரும்புகிறார்கள் என்றார்.
0 Comments