தமிழகத்தில் 6 பேர் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு போட்டியின்றித் தேர்வு

தமிழகத்தில் அதிமுக மற்றும் திமுக கட்சிகளைச் சேர்ந்த தலா 3 பேர் என மொத்தம் 6 பேர் மாநிங்களவை உறுப்பினர் பதவிக்கு போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இந்தத் தகவலை சட்டப் பேரவைச் செயலாளரும், தோ்தல் நடத்தும் அதிகாரியுமான கி.சீனிவாசன் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது வெளியிட்டார்.

மாநிலங்களவைத் தோ்தலில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் அனைத்தும் திங்கள்கிழமை பரிசீலிக்கப்பட்டன. அதன்படி, ஆறு பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டன. மூன்று சுயேச்சை வேட்பாளா்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 

அதன்படி, அதிமுக சாா்பில் மு.தம்பிதுரை, கே.பி.முனுசாமி ஆகியோரும், ஜி.கே.வாசனும்(தமாகா), திமுக சாா்பில் என்.ஆா்.இளங்கோ, அந்தியூா் செல்வராசு, திருச்சி சிவா ஆகியோரும் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

வேட்புமனுக்களைத் திரும்பப் பெற 18-ஆம் தேதி கடைசி நாள். எனவே, இன்று மாலை 3 மணியளவில் இறுதி வேட்பாளா் பட்டியல் வெளியிடப்பட்டது. காலியிடங்களும், வேட்பாளா்களின் எண்ணிக்கையும் சரிசமமாக இருந்ததால், போட்டியின்றி அனைவரும் தோ்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஆறு வேட்பாளா்களும் வாக்குப் பதிவு இல்லாமலேயே மாநிலங்களவைக்குத் தோ்வு செய்யப்பட்டுள்ளனர்.

Post a Comment

0 Comments