கல்லூரி மாணவிக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை! -நடிகரின் மகன் கைது


கல்லூரி மாணவிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த நடிகரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தூரல் நின்னு போச்சு, வசந்த காலம் உள்ளிட்ட பல தமிழ்ப் படங்களில் குணச்சித்திர நடிகராகவும், வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்திருந்தவர் நடிகர் சூர்ய பிரகாஷ். 

தற்போது அதிமுகவில் நட்சத்திர பேச்சாளராக இருக்கிறார். இவரது மகன் விஜய் ஹரிஷ். 25 வயதாகும் இவர் ‘நாங்களும் நல்லவங்கதான் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

விஜய் ஹரிஷ் வண்ணாரப்பேட்டேயைச் சேர்ந்த பி.காம் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவியுடன் பழக்கத்தில் இருந்து வந்துள்ளார். இதையடுத்து கடந்த ஜனவரி மாதம் விருகம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டுக்கு மாணவியை அழைத்துச் சென்று குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் விஜய் ஹரிஷ்.

முதல் முறை மயக்கத்தில் உடலுறவு கொண்டு அதை வீடியோ எடுத்து வைத்து அதன் பின்பு பேஸ்புக்கில் போடுவதாக மிரட்டி பல முறை உடலுறவு கொண்டுள்ளார். 


மேலும் மீண்டும் தான் உறவுக்கு அழைக்கும் போதெல்லாம் வரவேண்டும் என்றும் இல்லையென்றால் புகைப்படங்களை சமூகவலைதளங்களில் வெளியிட்டு விடுவதாகவும் மாணவியை மிரட்டியுள்ளார்.

இந்நிலையில் கல்லூரி மாணவி நேற்று முன்தினம் கொடுத்த புகாரின் பேரில் வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் நடிகர் விஜய் ஹரிஷை கைது செய்து 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Post a Comment

0 Comments