கொரோனா வைரஸ் தீவிரமாக பரவுகிறது! அதிர்ச்சி தகவல்!


கொரோனா பாதித்த நபரின் பிறந்த நாள் விழாவில் பங்கேற்ற நொய்டாவை சேர்ந்த 6 பேருக்கு மருத்துவ பரிசோதனையில் வைரஸ் பாதிப்பு இல்லை என தெரியவந்துள்ளது

சீனாவில் அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸ் தற்போது 70-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மக்களை அச்சுறுத்தி வருகிறது. இது இந்தியாவிலும் பரவியுள்ளதால் மக்கள் பீதியில் உள்ளனர். மத்திய அரசும் அந்தந்த மாநில அரசுகளும் கொரோனாவை எதிர்கொள்ள தயார் நிலையில் இருப்பதாக கூறுகின்றன.

இந்த நிலையில் டெல்லியில் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான ஒருவர் நொய்டாவில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் பிறந்தநாள் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்

அந்த நிகழ்ச்சியில் நொய்டாவில் உள்ள தனியார் பள்ளியைச் சேர்ந்த மாணவர்களும் கலந்து கொண்டனர். இந்த விவகாரம் வெளியே வந்தவுடன் நொய்டா பள்ளி செவ்வாய்க்கிழமை மூடப்பட்டது


இதனிடையே நோய் பாதித்த டெல்லி நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் அந்த பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்ட 6 பேருக்கு காய்ச்சல், சளி ஆகியவை இருந்தது

இதையடுத்து அவர்களை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதில் அவர்களது கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என உறுதியாகிவிட்டது. எனினும் அவர்கள் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்படுவர் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது

ஒரு வேளை அவர்களுக்கு மீண்டும் கொரோனா அறிகுறிகள் தென்பட்டால் மீண்டும் சோதனைக்குள்படுத்த வேண்டும் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. எனவே இதுகுறித்து யாரும் அச்சம் கொள்ள வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் பிஎன் சிங் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments