சேப்பாக்கம்
மைதானத்தில் ரீ எண்ட்ரி கொடுத்த தோனியை,
ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ஒன்று கூடி அரங்கம்
அதிர உற்சாக குரல் எழுப்பி
வரவேற்றுக் கொண்டாடினர்.
இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல்.
கிரிக்கெட் திருவிழா வரும் 29-ஆம் தேதி தொடங்கும்
நிலையில், சென்னையில் ரசிகர்கள் தற்போதே தயாராகியுள்ளனர். சென்னை
அணியின் கேப்டன் தோனி, தனது
பயிற்சியை நேற்று முன்தினம் தொடங்கினார்.
சேப்பாக்கத்தில்
தோனி பயிற்சி மேற்கொள்வதை பார்ப்பதற்கு
ரசிகர்களுக்கு இலவசம் என்பதால் இந்தியாவில்
எங்கும் இல்லாத அளவிற்கு தேனீக்கள்
போல் மைதானத்தை
மொய்க்கத் தொடங்கிவிட்டனர் அவரது ரசிகர்கள்.
சென்னை
சூப்பர் கிங்ஸ் என்றாலே கெத்து
எனவும், அணியில் விளையாடக் கூடியவர்களை வீரர்களாக பார்க்காமல் தமிழ் கலாச்சாரம் போல்
மாமா, மச்சான், அண்ணன் என தங்களின்
சொந்தங்களாகவே பார்ப்பதாக கூறுகிறார் தோனியின் தீவிர ரசிகர் சரவணன்.
பொதுவாக
கிரிக்கெட் போட்டிகளை பார்ப்பதற்குத் தான் ரசிகர்கள் மைதானத்தை
நோக்கி படையெடுப்பதை பார்த்திருப்போம், ஆனால் இங்கு தோனியின்
பயிற்சியை பார்ப்பதற்கே தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் இருந்து
வந்து, நண்பர்களின் அறையில் தங்கி பயிற்சியின்போது
மைதானத்தை அலங்கரிக்க தொடங்கிவிட்டனர் ரசிகர்கள்.
உலகக் கோப்பைக்கு பிறகு இந்திய அணியில்
தோனியை பார்க்கமுடியாத நிலையில், அந்த ஏக்கத்தைப் போக்கும்
வகையில், சிஎஸ்கே பயிற்சியின் போது
தோனியின் ஆட்டத்தை கண்டுகளித்து வருகின்றனர் சி.எஸ்.கே
ரசிகர்கள்.
இந்த ஆண்டிற்கான இந்திய வீரர்களின்
பட்டியலில் தோனியின் பெயரை பிசிசிஐ நீக்கிய
முடிவு, ரசிகர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது. இதனால் இந்திய கிரிக்கெட்
கட்டுப்பாட்டு வாரியத்திற்கு தங்களது கண்டனங்களை பதிவு
செய்துள்ளனர்.
வழக்கமான
பாணியில் கையில் பேட்டுடன் சேப்பாக்கத்தில்
களம்கண்ட அவரைக் கண்ட ரசிகர்கள்
தோனி... தோனி... தோனி... என
அரங்கம் அதிர உற்சாகத்துடன் அவரது
பெயரைச் சொல்லி கொண்டாடினர்.
0 Comments