ஐபில் போட்டி ரத்து! ராஞ்சி திரும்பினார் டோனி!

கோவிட்-19 வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளதால், சென்னையில் முகாமிட்டிருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியின் கேப்டன் எம்.எஸ். தோனி நேற்று ராஞ்சி புறப்பட்டுச் சென்றார்.

2020-ம் ஆண்டு ஐபிஎல் போட்டிவரும் 29-ம் தேதி தொடங்க இருந்தது. ஆனால் கோவிட்-19 வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக போட்டியை ஏப்ரல் 15 வரை தள்ளிவைத்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே பயிற்சிக்காக கடந்த 1-ம் தேதி சிஎஸ்கே அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி சென்னை வந்திருந்தார். 2-ம் தேதி முதல் சென்னை எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் தோனி உள்ளிட்ட வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில் 2 நாட்களுக்கு முன்பு ஐபிஎல் போட்டி தள்ளிவைக்கப்படுவாக பிசிசிஐ அறிவித்தது. இதையடுத்து நேற்று எம்.எஸ். தோனி சென்னையில் இருந்து ராஞ்சி புறப்பட்டுச் சென்றார். அப்போது ஸ்டேடியத்தில் குழுமியிருந்த ரசிகர்களை நோக்கி அவர் கையசைத்துவிட்டுச் சென்றார். ரசிகர்கள் கையெழுத்துகேட்டபோது மறுக்காமல் அவர்களுக்கு கையெழுத்து போட்டு தந்துவிட்டு புன்னகையுடன் அவர் புறப்பட்டுச் சென்றார்.

Post a Comment

0 Comments