வயலில் நாற்று நட்ட தமிழக முதலமைச்சர்! மகிழ்ச்சியில் விவசயிகள்

தன்னை ஒரு விவசாயி என்றும், விவசாயிகளுக்கான முதலமைச்சர் என்று  அடிக்கடி சொல்பவர் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.

சொல்வதோடு மட்டுமல்லாமல் குடிமராமத்து பணிகள், நீர் பாசன திட்டங்கள், காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்க சிறப்பு வேளாண் மண்டல சட்டம் கொண்டு வந்தது உள்ளிட்ட பல்வேறு விவசாய நலதிட்டங்களில் ஆர்வம் காட்டி வருகிறார்.

குறிப்பாக, சிறப்பு வேளாண் மண்டல சட்டம் கொண்டு வந்தமைக்காக விவசாயிகள் சார்பில் திருவாரூரில் இன்று முதலமைச்சருக்கு பாராட்டு விழா நடந்தது. அதற்கு முன்னதாக, இன்று காலை நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமையவுள்ள புதிய மருத்துவக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்ட நாகை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார்.


அப்போது, வழியில் நீடாமங்கலம் கிராமம் அருகே காரை நிறுத்தி வயலில் வேலை செய்து கொண்டிருந்த விவசாயிகளிடம் மகிழ்ச்சியுடன் உரையாடி, அவர்களோடு சேர்ந்து வயலில் இறங்கி நாற்று நட்டார்.

Post a Comment

0 Comments