மகளிர் கிரிக்கெட் அணியை நினைத்தால் பெருமையாக உள்ளது! மனம் உருகிய விராட் கோலி


ஐசிசி மகளிர் டி20 உலக கோப்பையின் இறுதிப்போட்டிக்கு இந்திய மகளிர் அணி முன்னேறியுள்ளது. இதையடுத்து இந்திய கேப்டன் விராட் கோலி இந்திய மகளிருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இந்திய மகளிர் அணிக்கு பல கிரிக்கெட் பிரபலங்கள், முன்னாள் வீரர்கள் வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில், கோப்பையுடன் நாடு திரும்ப வேண்டும் என்று இந்திய துவக்க ஆட்டக்காரர் கே.எல். ராகுல் கேட்டுக் கொண்டுள்ளார்.

இங்கிலாந்துடன் இன்று அரையிறுதிப்போட்டியில் மோதவேண்டிய நிலையில், மழை காரணமாக புள்ளிகள் அடிப்படையில் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. 

இந்நிலையில், இன்று நடைபெறவுள்ள தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான மற்றொரு அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி இந்தியாவுடன் இறுதிப்போட்டியில் மோதும்.

இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம் கடந்த 21ம் தேதி முதல் வரும் 8ம் தேதிவரை நடைபெறவுள்ள ஐசிசி மகளிர் டி20 உலக கோப்பை தொடரில் ஏ அணியில் மோதிய இந்திய மகளிர், தாங்கள் விளையாடிய 4 போட்டிகளிலும் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினர். 

இந்நிலையில், இன்று நடைபெறவிருந்த இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி போட்டி மழை காரணமாக ரத்து செயயப்பட்ட நிலையில், புள்ளிகள் அடிப்படையில் இந்தியா வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

பெருமையாக உள்ளதாக பாராட்டு இந்நிலையில் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம் கண்டுள்ள இந்திய மகளிர் அணிக்கு கேப்டன் விராட் கோலி தன்னுடைய பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். 

இந்திய மகளிர் டி20 உலக கோப்பையில் இறுதிப்போட்டிக்கு சென்றுள்ளது பெருமையாக உள்ளதாக அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். மேலும் இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடவும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments