முதன் முறையாக இறுதி சுற்றுக்கு முன்னேறிய இந்தியா! மகளிர் டி 20:


மழையால் இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி ஆட்டம் ரத்தானதால், மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதிச்சுற்றுக்கு முதல்முறையாக முன்னேறியது இந்திய அணி.

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 7-ஆவது மகளிர் டி20 உலகக் கோப்பை போட்டி தற்போது அரையிறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்தியா- இங்கிலாந்து அணிகளும், மற்றொரு அரையிறுதியில் நடப்பு சாம்பியன் ஆஸி.-தென்னாப்பிரிக்க அணிகளும் மோதுகின்றன.    

குரூப் ஏ பிரிவில் 4 ஆட்டங்களிலும் வெற்றி கண்டு முதலிடத்துடன் அரையிறுதிக்கு தகுதி பெற்றது இந்தியா. குரூப் பி பிரிவில் தென்னாப்பிரிக்காவுடன் தோல்வி கண்டு மற்ற 3 ஆட்டங்களில் வென்று இரண்டாம் இடத்துடன் அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது இங்கிலாந்து.

ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த இன்றைய ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து இந்திய அணி முதல்முறையாக மகளிர் டி20 உலகக் கோப்பையின் இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது. குரூப் ஏ பிரிவில் 4 ஆட்டங்களில் வென்ற நிலையில், இந்தியா நேராக இறுதிக்குள் நுழைந்துள்ளது.


சிட்னில் நடைபெறும் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவும்-தென்னாப்பிரிக்காவும் மோதுகின்றன.

Post a Comment

0 Comments