அரசுக் கல்லூரிகளில் காலியாக உள்ள பேராசிரியர் பணியிடங்கள்!

தமிழகத்தில் உள்ள அரசுக் கல்லூரிகளில் காலியாக உள்ள பேராசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி அன்பழகன் தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி அரசு மகளிர் கல்லூரியில் நேற்று முப்பெரும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

‘முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயர்கல்வியில் புதிதாக 961 பாடப்பிரிவுகளைக் கொண்டு வந்தார். தற்போது முதல்வர் பழனிசாமியின் ஆட்சியில் 12 கலை, அறிவியல் கல்லூரிகள் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது. 705 புதிய பாடப்பிரிவுகள் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்திய அளவில் உயர்கல்வியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கையில் தமிழகம் 49 சதவீதம் அதிகரித்துள்ளது. அரசுக் கல்லூரிகளில் பேராசிரியர்பணிக்கான காலியிடங்கள் விரைவில் நிரப்பப்படுகிறது. கெளரவ விரிவுரையாளர்கள் தனித்தேர்வு வைத்து நியமிக்கப்படுவர்’. இவ்வாறு தெரிவித்தார்.

Post a Comment

0 Comments