நாடக காதல் திரைப்படங்கள் அதிகரிக்க காரணம் இது தானா?


நாடகக் காதல், ஆணவ கொலைகள் பற்றி நடுநிலையான பார்வையோடு ஒரு சினிமா எடுக்கப்படும் என்று இயக்குநர் சண்முகம் முத்துசாமி அறிவித்துள்ளார்.

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள அடங்காதே திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சண்முகம் முத்துசாமி. ஸ்ரீக்ரீன் புரொடக்சன் தயாரித்துள்ள இத்திரைப்படத்தில் சுரபி, மந்த்ரா பேடி, யோகி பாபு, சரத்குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.இத்திரைப்படத்தின் பணிகள் முடிவடைந்து இசை வெளியீட்டு விழா நடந்து முடிந்திருக்கும் நிலையில் படம் இன்னும் திரைக்கு வராமலேயே உள்ளது. இந்நிலையில் தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் இயக்குநர் சண்முகம் முத்துசாமி.

அந்த ட்விட்டர் பதிவில் கூறப்பட்டிருப்பதாவது
வேற வழியில்லை... வெகு விரைவில் நாடகக் காதல் என்ற வார்த்தை ஏன் கண்டுபிடிக்கப்பட்டது என்றும், ஆணவக் கொலைகள் பற்றிய நடுநிலையான பார்வையோடு ஒரு சினிமா எடுக்கப்படும்என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் அப்பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் பல்வேறு காலகட்டங்களில் சாதியை மையப்படுத்திய படங்கள் வெளியாகி வந்தாலும் சமூக வலைதளங்களின் வருகைக்குப் பின் வெளியான படங்கள் விவாதத்தை ஏற்படுத்தி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments