தலைமுடி அடர்த்தியாக வளர சிறந்த வழிமுறைகள்! (Hair Growth Tips in Tamil)

தலைமுடி என்பது ஒவ்வொருவருக்கும் எவ்வளவு முக்கியம் என்பதை சொல்ல வேண்டியதில்லை. முகத்தின் அழகு கூடுவதற்கு காரணமே நம் தலைமுடி தான். சிலருக்கு இயற்கையிலேயே ஆரோக்கியமான தலைமுடி இருக்கும். சிலருக்கு அப்படி இல்லாததால் பல அழகுப் பொருட்களை வைத்து முடியை பேணுவார்கள். இப்படி பார்த்து பார்த்து பாதுகாக்கும் தலைமுடி சந்திக்கும் முக்கிய பிரச்சனை முடி கொட்டுதல் மற்றும் பொடுகு.
Hair Growth Tips in Tamil
Hair Growth Tips in Tamil
அதுமட்டுமல்லாமல், சிகை அலங்காரத்தில் ஈடுபாடு உள்ளவர்கள், அதிலும் ஈரப்பதத்துடன் கூடிய முடியுடன் காட்சி அளிக்க விரும்புபவர்களுக்கு ஒரு கெட்ட செய்தி காத்துக் கொண்டிருக்கிறது. இதை பார்ப்பதற்கு அழகை மெருகேற்றினாலும், ஈர முடி பல முடிப் பிரச்சனைகளுக்கு ஆளாக்கும். 

அதுவும் பருவக்காலத்தில் பல விதமான முடிப் பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும். அமிழ மழை, அழுக்கு மழை நீர் மற்றும் அதிக ஈரப்பதம் நிறைந்த வானிலையால் தலை முடி மற்றும் தலை சருமமும் பாதிப்புக்குள்ளாகும்.(Hair Growth Tips in Tamil)


உலகத்தில் எந்த ஒரு மூலையில் இருந்தாலும் சரி, கீழ்க்கூறிய டிப்ஸ் தலைமுடி மற்றும் தலை சருமத்தை பருவக்காலத்தில் பாதுகாப்பாக வைக்க உதவும்.

ஈரப்பதம்

தலை முடியை முடிந்தவரை காய்ந்த நிலையிலேயே வைத்திருக்க வேண்டும். பொதுவாக தினசரி 50-60 முடிகளை இழக்கின்ற நாம் பருவக்காலத்தில் நம்மை அறியாமலேயே 200 முடிகளுக்கு மேல் இழக்கிறோம். அதனால் முடியை காய்ந்த நிலையில் வைத்திருந்தால், அதிகமான முடி கொட்டுதல் மற்றும் பொடுகு தொல்லையில் இருந்து தலைமுடி மற்றும் தலை சருமத்தை பாதுகாக்கலாம்.(Hair Growth Tips in Tamil)

ஷாம்பு

பொடுகு மற்றும் முடி கொட்டுதல் தவிர எண்ணெய் பதமான தலை சருமமும் ஒரு பிரச்சனையே. இதனை போக்க மிதமான ஷாம்புவை பயன்படுத்தி சீரான முறையில் தலைமுடியை அலச வேண்டும். (Hair Growth Tips in Tamil)
Hair Growth Tips in Tamil

மேலும் தினசரி ஷாம்புவைக் கொண்டு முடியை அலச மற்றொரு காரணம் என்னவென்றால் பருவக்காலத்தில் தளர்ச்சி அடையும் தலைமுடியை சரி செய்யவே. மழை நீரில் முடி நனைந்தால், ஷாம்புவால் முடியை கழுவ வேண்டும்.

உணவு முறை

முடியின் ஆரோக்கியத்துக்கு உதவியாக துணை புரிவது புரதச்சத்து. ஆகவே முடி ஆரோக்கியமாக இருக்க அதிக புரதச்சத்து அடங்கியுள்ள முட்டை, கேரட், தானியங்கள், பச்சை காய்கறிகள், பீன்ஸ், நட்ஸ், குறைவான கொழுப்புச் சத்து அடங்கியுள்ள பால் பொருள்களை சாப்பிட வேண்டும்.

பதப்படுத்துதல்

காற்றில் கலந்துள்ள ஈரத்தன்மை முடியில் அதிகம் பட்டால், முடி வறண்ட நிலைக்கு உள்ளாகும். நாளடைவில் பார்க்கவும் கலையிழந்து போகும். அதனால் சீரான முறையில் தலைமுடியை பதப்படுத்தினால், இந்த வறண்ட நிலை மாறும்.(Hair Growth Tips in Tamil)

டிப்ஸ்

  • அதிக அளவு தண்ணீர் பருக வேண்டும். 
  • வாரம் ஒரு முறையாவது தலைக்கு எண்ணெய் தேய்க்கவும். 
  • அகண்ட பற்கள் உள்ள சீப்பினை பயன்படுத்த வேண்டும். 
  • ஈரத்துடன் இருக்கும் போது கூந்தலை கட்டக் கூடாது.
  • ஹேர் ட்ரையர் பயன்படுத்தும் முன் முடியை உலர்த்தவும். 
  • சீப்பினை அடுத்தவர்களுக்கு பகிர கூடாது.

ஆலோசனை


இந்த டிப்ஸ்களை பின்பற்றியும் தலை முடியிலும், சருமத்திலும் பிரச்சனை நீடித்தால், ஒரு மருத்துவரை அணுகுவது நல்லது. மேலும் சீரான முறையில் முடியை பராமரித்தால், இந்த பிரச்சனைகளில் இருந்து விலகியே நிற்கலாம்.

Post a Comment

0 Comments