இன்ஸ்டாகிராம்-இல் இனி ஒரே நேரத்தில் பலரை ப்ளாக் செய்ய முடியும்!

ஃபேஸ்புக்கின் இன்ஸ்டாகிராம் சேவையில் ஒரே சமயத்தில் பல அக்கவுண்ட்களை பிளாக் செய்யும் அம்சம் சோதனை செய்யப்படுகிறது. புதிய அம்சம் கொண்டு இன்ஸ்டாவில் ஏற்படும் குற்றங்களை குறைக்க முயற்சி செய்யப்படுவதாக தெரிகிறது. இதுபற்றிய முழு விவரங்களை வரும் நாட்களில் தெரிவிக்க இருப்பதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

புதிய அம்சங்கள் பற்றிய சோதனைகளில் ஈடுபடும் ஜேன் மன்சுன் வொங் எனும் ஆய்வாளர், பயனர்கள் பல்வேறு அக்கவுண்ட்களை ஒரே சமயத்தில் பிளாக் செய்ய வலியுறுத்தும் வசதி சோதனை செய்யப்படுவதை உறுதிப்படுத்தும் ஸ்கிரீன்ஷாட்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.

வொங் வெளியிட்டுள்ள ஸ்கிரீன்ஷாட்களில் பயனர்கள் பதிவிடும் கமெண்ட்களை தேர்வு செய்து அவற்றை ஆஃப், ரெஸ்ட்ரிக்ட் அல்லது பிளாக் செய்ய அனுமதிக்கும் அம்சம் காணப்படுகிறது. வொங் ட்விட்களுக்கு பதில் அளித்துள்ள இன்ஸ்டாகிராம், இது வெறும் சோதனை மட்டும் தான் இதுபற்றிய விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளது.


ஆன்லைன் துன்புறுத்தல்களை தடுக்க ஃபேஸ்புக்கின் இன்ஸ்டாகிராம் தொடர்ந்து புதிய அம்சங்களை சோதனை செய்து வருகிறது. முன்னதாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் இன்ஸ்டாகிராம், ரெஸ்ட்ரிக்ட் எனும் அம்சத்தை அறிமுகம் செய்தது. இந்த அம்சம் கொண்டு பயனர்கள் தங்களின் பதிவுகளுக்கு வரும் கமெண்ட்களை மதிப்பிட முடியும். 

பின் அவற்றை அழிக்கவோ, அனுமதிக்கவோ அல்லது நிராகரிக்கும் வசதியை இந்த அம்சம் வழங்குகிறது. ரெஸ்ட்ரிக்ட் அம்சத்தை தொடர்ந்து கேப்ஷன் வார்னிங் எனும் அம்சத்தை இன்ஸ்டாகிராம் அறிவித்தது. இந்த அம்சத்தில் பயனர்கள் புகைப்படம் அல்லது வீடியோக்களில் தவறான கருத்துக்களை பதிவிட்டால், இன்ஸ்டாகிராம் கருத்தினை மாற்றக் கோரும் தகவலை திரையில் காண்பிக்கும்.

Post a Comment

0 Comments