சச்சினுடன் ‘பாக்சிங்’ செய்த இர்ஃபான் பதானின் மகன்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர், கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதானின் குழந்தையோடு கொஞ்சி விளையாடும் வீடியோ படுவைரலாகி வருகிறது. வீடியோவில் மாஸ்டர் பிளாஸ்டருடன், செல்லமாக ‘பாக்சிங்' சண்டை போடுகிறான் பதானின் மகன் இம்ரான். 

இது குறித்த வீடியோவை தனது ட்விட்டரில் பகிர்ந்திருந்த பதான், “இம்ரான், இந்த வீடியோவில் என்ன செய்கிறான் என்பதை உணரவில்லை. ஆனால், வளர்ந்த பிறகு தெரிந்து கொள்வான். சச்சினுடன் பாக்சிங்,” என்று பதிவிட்டிருந்தார். 

இந்த ட்வீட்டை ரீ-ட்வீட் செய்த சச்சின், “சிறிய குழந்தைகளோடு நேரம் செலவிடுவது எப்போதும் ஜாலிதான். இம்ரான், உன் தசைகள் என்னைவிட உன் அப்பாவினுடையதைவிட ஒரு நாள் வலுவாக இருக்கும்,” என்று நெகிழ்ச்சியோடு கூறியிருந்தார். 

ரோடு சேஃப்டி வேர்ல்டு சீரிஸ் என்கிற கிரிக்கெட் தொடரில் கிரிக்கெட் ஜாம்பவான்கள் விளையாடி வருகிறார்கள். டி20 கிரிக்கெட்டாக நடக்கும் இந்த தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்றுள்ளனர். 

இந்தத் தொடரின் முக்கிய நோக்கம் சாலைப் பாதுகாப்பு குறித்து மக்களின் மனங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தி, சாலைகளில் அவர்கள் நடந்து கொள்ளும் முறையை மாற்றுவதுதான்.

மார்ச் 7 ஆம் தேதி நடந்த முதல் போட்டியில் இந்தியா லெஜெண்ட்ஸ் அணி, 7 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் லெஜெண்ட்ஸ் அணியை வீழ்த்தியது.

Post a Comment

0 Comments