காஞ்சிபுரம் கூட்டுறவு துறையில் வேலை! 246 காலியிடங்கள்!!

காஞ்சிபுரம் கூட்டுறவு சங்கம், வங்கிகளில் 246 உதவியாளர் பணிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ஏற்கனவே, இது தொடர்பான அறிவிக்கை வெளியான நிலையில், தற்போது மறுஅறிவிப்பு வெளியாகியுள்ளது.

காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியில் இருந்து கடந்த ஜனவரி மாதம் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டது. அந்த செய்தியைக் காண இங்கு க்ளிக் செய்யவும். இந்த நிலையில், தற்போது இதே காஞ்சிபுரம் கூட்டுறவு துறையில் இருந்து மறுஅறிவிப்பு வெளியாகியுள்ளது.

புதிய அறிவிப்பின்படி, கூட்டுறவு வங்கியில் 133 உதவியாளர் காலியிடங்களும், கூட்டுறவு சங்கங்களில் 113 உதவியாளர் காலியிடங்களும் நிரப்பப்படுகிறது. இந்த காலியிடங்கள் அனைத்தும் உத்தேசமானதாகும்.

உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், ஏதேனும் ஒரு பட்டப்படிப்பும் கூட்டுறவு பயிற்சியும் பெற்றிருக்க வேண்டும். அதிகபட்சமாக 30 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். குறிப்பிட்டவர்களுக்கு வயது வரம்பு தளர்வு அளிக்கப்படுகிறது.


கூட்டுறவு சங்கங்களில் உதவியாளர் பணிக்கான எழுத்துத்தேர்வு மே 10 ம் தேதி நடைபெறுகிறது. இதே போன்று, கூட்டுறவு வங்கிகளில் உதவியாளர் பணிக்கான தேர்வு மே 17 ஆம் தேதி நடைபெறுகிறது.

இது பற்றிய முழுமையான விவரங்களுக்கு காஞ்சிபுரம் கூட்டுறவுத்துறை வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்

Post a Comment

0 Comments