பிரதமர் மோடிக்கு அறிவுரை கூறிய மன்மோகன் சிங்! இது தான் விஷயமா?

சமூக ஒற்றுமையின்மை, பொருளாதார மந்தநிலை மற்றும் சர்வதேச சுகாதாரப் பாதிப்பு ஆகிய மூன்று பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டிய அபாயத்தில் இந்தியா உள்ளது என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

இந்தியா எதிர்கொள்ளும் பிரச்னைகள் என்ற முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் எழுதிய கடிதம் குறித்து தி இந்து ஆங்கில நாளிதழில் செய்தி வெளியாகியிருந்தது.

அதில், ‘மிக கடினமான இதயத்துடன் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். வலிமையான கூட்டணி கொண்ட ஆபத்துகளால் இந்தியாவின் ஆன்மா மட்டும் சிதைவுறப்போவதில்லை. 


உலக அளவில் நம்முடைய ஜனநாயக சக்தியும் பொருளாதார இடமும் சுருங்கும் என்று மிகவும் வேதனையடைகிறேன். டெல்லியில் நடைபெற்ற மதக் கலவரம் மதசகிப்பின்மைவாதிகளால் தூண்டிவிடப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி இந்திய மக்களை சமாதானப்படுத்த வேண்டும். வெறும் வார்த்தைகளில் இல்லாமல் செயல்களின் மூலம் அதனைச் செய்யவேண்டும்.

உண்மையென்னவெனில் தற்போது சூழ்நிலை மிகவும் மோசமானதாகவும், வருத்தம் தோய்ந்ததாகவும் உள்ளது. நாம் அறிந்த இந்தியா தற்போது வேகமாக நழுவி விழுகிறது. வேண்டுமென்ற தூண்டிவிடப்பட்ட மதக் கலவரம், தவறான பொருளாதார மேலாண்மை, சர்வதேசத்தில் நிகழும் சுகாதார அச்சநிலை ஆகியவை இந்தியாவின் வளர்ச்சிக்கு அச்சுறுத்தலாக உள்ளன’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments