மாஸ்டர் திரைப்படத்தின் கதை இதுதான்! இணையத்தில் லீக் ஆனதால் அதிர்ச்சி!

மாஸ்டர் திரைப்படத்தின் இசை வெளியட்ட நிலையில், திரைப்படத்தின் கதை இதுதான் என இணையத்தில் ஒரு கதை வெளியாகி வைரலாகி வருகிறது.

மாஸ்டர், விஜய் நடிப்பில் உருவாகி வரும் அதிரடி திரில்லர் திரைப்படம். இத்திரைப்படம் வரும் ஏப்ரல் 2020-ல் திரைக்கு வரத் தயாராகி வருகிறது. 

லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் மாலவிகா மோகனன் நாயகி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சூப்பர் ஸ்டார் “ரஜினிகாந்த்” நடிப்பில் உருவான பேட்ட திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை, தனது இரண்டாவது தமிழ் படத்தில் கதாநாயகியாக விஜய்யுடன் கைகோர்த்துள்ளார்.

இத்திரைப்படத்தில் விஜய் பேராசிரியராக இருக்கும் கல்லூரியில் மாலவிகா மாணவியாக நடிப்பதாக யூகிக்கப்படுகிறது. இதனை உறுதி படுத்தும் விதமாக இன்று வெளியிடப்படும் இத்திரைப்படத்தின் இசை வெயீட்டு விழா போஸ்டரில் அவர்., சேலை அணிந்து புத்தகங்களை சுமந்து செல்வதைக் காண முடிகிறது. எனவே, அவர் ஒரு நூலகர் அல்லது ஒரு கற்பித்தல் ஊழியராக நடிக்கலாம் எனவும் நெட்டிசன்களை யூகித்துள்ளனர். என்றபோதிலும் முடிவுகளை காத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

இத்திரைப்படத்தில் நடிகர் விஜய் உடன் விஜய் சேதுபதி, சாந்தனு பாக்யராஜ், “கௌரி ஜி கிஷன்,” ஆண்ட்ரியா எரேமியா, ரம்யா சுப்பிரமணியன், “ஸ்ரீமான்,” “சஞ்சீவ்,” “ஸ்ரீநாத்” மற்றும் நாகேந்திர பிரசாத் ஆகியோர் நடிக்கின்றனர். அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார். எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ் இப்படத்தை வழங்குகின்றனர்.

Post a Comment

0 Comments