நிர்பயா பலாத்கார வழக்கில் குற்றவாளிகளுக்கு மார்ச் 20 தூக்கு தண்டனை!


நிர்பயா குற்றவாளிகள் நான்கு பேருக்கும் மார்ச் 20ம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என டில்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டில்லியில், கடந்த 2012ம் ஆண்டு, மருத்துவ மாணவி நிர்பயா, ஓடும் பஸ்சில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். சித்ரவதை செய்யப்பட்ட அவர் பஸ்சில் இருந்து தூக்கி எறியப்பட்டார். பின் மருத்துவமனையில் உயிரிழந்தார். 

இந்த சம்பவத்தில், முகேஷ்குமார் சிங், பவன்குமார் குப்தா, வினய் குமார், அக் ஷய் கமார் ஆகியோக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனைக்கான நாள் நெருங்கி வரும் போது எல்லாம் குற்றவாளிகள் சார்பில் பல்வேறு மனுக்களை மாறி மாறி தாக்கல் செய்து இழுத்தடித்தனர்.

இதனால், தண்டனை நிறைவேற்றப்படாமல், இரண்டு முறை தண்டனை நிறைவேற்றம் ஒத்திவைக்கப்பட்டது. மார்ச் 3ம் தேதி காலை 6 மணிக்கு தண்டனையை நிறைவேற்ற 3வது முறையாக நாள் குறிக்கப்பட்டது. ஆனால், 

மனு 

தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என பவன்குப்தா உச்சநீதிமன்றத்தில், மறுசீராய்வு மனு தாக்கல் செய்தார். இதனை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பின்னர் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திற்கு கருணை மனுவை அனுப்பினார். இதனால், தூக்கு தண்டனை நிறைவேற்றப்படாமல் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.

மனு நிராகரிப்பு 

பவன்குமார் குப்தாவின் கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்து உத்தரவு பிறப்பித்தார். இதனையடுத்து, குற்றவாளிகள் 4 பேருக்கு இருந்த அனைத்து சட்ட வாய்ப்புகளும் நிறைவடைந்துவிட்டன.

இதனிடையே, நிர்பயா குற்றவாளிகள் 4 பேரின் உடல்நிலை மற்றும் மனநிலை குறித்து தேசிய மனித உரிமை ஆணையம் ஆய்வு செய்ய வேண்டும் என டில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை நிராகரித்துவிட்ட நீதிமன்றம், இந்த விவகாரம் தொடர்பாக மனித உரிமை ஆணையத்தை அணுகும்படி மனுதாரருக்கு அறிவுறுத்தியுள்ளது.

தூக்கு தண்டனை 

இந்நிலையில், குற்றவாளிகள் நான்கு பேருக்கும் வருகின்ற மார்ச் 20ம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என டில்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அன்றைய தினம் காலை 5:30 மணிக்கு 4 பேரையும் தூக்கிலிட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

Post a Comment

0 Comments