நோக்கியாவின் 5ஜி ஸ்மார்ட் போன் அறிமுகமாக போகிறது! அசத்தும் அம்சங்கள்!

ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் முன்னதாக புதிய நோக்கியா ஸ்மார்ட்போன்கள் மார்ச் 19-ம் தேதி அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்து இருந்தது. அந்த வரிசையில் நோக்கியாவின் முதல் 5ஜி மொபைல் அதே நிகழ்வில் அறிமுகம் செய்யப்படும் என தெரிவித்துள்ளது.


நோக்கியா 5ஜி ஸ்மார்ட்போனின் பெயர், வடிவமைப்பு மற்றும் ஹார்டுவேர் அம்சங்களின் விவரங்கள் மர்மமாக உள்ளது. எனினும், இந்த ஸ்மார்ட்போனிற்கான விளம்பர வீடியோ புதிய ஜேம்ஸ் பாண்ட் திரைப்படத்துடன் வெளியிடப்படுகிறது. அந்த வகையில் முதல் 90 நொடி வீடியோ மார்ச் 8-ம் தேதி வெளியாகிறது.


மற்ற ஸ்மார்ட்போன்களுடன் நோக்கியாவின் முதல் 5ஜி ரெடி ஸ்மார்ட்போனும் அறிமுகம் செய்யப்படும் என ஹெச்.எம்.டி. குளோபல் தெரிவித்துள்ளது. முன்னதாக வெளியான தகவல்களில் ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் நோக்கியா 8.3 5ஜி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்யலாம் என கூறப்பட்டது. 

ஏற்கனவே இந்த ஸ்மார்ட்போனிற்கான டீசரினை ஹெச்.எம்.டி. குளோவல் வெளியிட்டு இருந்தது. அதன்படி இதில் செய்ஸ் ஆப்டிக்ஸ், 4K யு.ஹெச்.டி. அல்ட்ரா வைடு வீடியோ சப்போர்ட், பக்கவாட்டில் கைரேகை சென்சார் மற்றும் மூன்று பிரைமரி கேமரா சென்சார்கள் வழங்கப்படலாம் என தெரிகிறது.

Post a Comment

0 Comments