அப்செட் ஆனா ஓபிஎஸ்! கைவிட்டு போன சின்னமனுர்.

தேனி மாவட்டத்தில் உள்ள 8 ஊராட்சி ஒன்றியங்களில் பெரியகுளம், சின்னமனூர், கடமலை மயிலை ஆகிய மூன்று ஒன்றியங்களில் நேற்று தலைவர் மற்றும் துணைத்தலைவர்களுக்கான மறைமுகத் தேர்தல் நடைபெற்றது. இதில், அ.தி.மு.க கவுன்சிலர்கள் புறக்கணித்ததால், பெரியகுளத்தில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. கடமலை மயிலை ஒன்றியத்தை அ.தி.மு.க-வும் சின்னமனூர் ஒன்றியத்தை தி.மு.க-வும் கைப்பற்றியது.

கடமலை ஒன்றியத்தில், 14 ஒன்றியக் கவுன்சிலர்களுக்கான தேர்தலில், 7 இடங்களில் தி.மு.க-வும், 7 இடங்களை அ.தி.மு.க-வும் கைப்பற்றி சம பலத்தில் இருந்தனர்.

சின்னமனூர் ஒன்றியத்தில் உள்ள 10 ஒன்றியக் கவுன்சிலர்களுக்கான தேர்தலில் 6 இடங்களில் தி.மு.க-வும், 4 இடங்களில் அ.தி.மு.க-வும் வெற்றி பெற்றிருந்தனர். இந்த நிலையில், 1-வது வார்டு தி.மு.க ஒன்றியக் கவுன்சிலர் ஜெயந்தி, ஓ.பன்னீர்செல்வத்தைச் சந்தித்து அ.தி.மு.க-வில் இணைந்தார். இதைக் கண்டித்து சின்னமனூரில் போராட்டம் நடத்தியது தி.மு.க!

ஜெயந்தி அ.தி.மு.க பக்கம் சாய்ந்ததால், அ.தி.மு.க; தி.மு.க சம பலத்துடன் இருந்தனர். இந்த நிலையில், ஜெயந்தியை மீண்டும் தி.மு.க பக்கம் வரவைப்பதற்கான முயற்சிகளை மாவட்ட தி.மு.க நிர்வாகிகள் ஈடுபட்டிருந்தனர். அதன் பலனாக, ஜெயந்தி மீண்டும் தி.மு.க பக்கம் சாய்ந்தார். தொடர்ந்து, தி.மு.க-வுக்கு பெரும்பான்மை கிடைத்ததால், நேற்று நடைபெற்ற தேர்தலில் தி.மு.க-வின் நிவேதா அண்ணாத்துரை, சின்னமனூர் ஊராட்சி ஒன்றியத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். ஜெயந்திக்கு துணைத்தலைவர் பதவி கொடுக்கப்பட்டது.

இது ஒருபுறம் என்றால், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த ஊரான பெரியகுளம் ஒன்றியத்தில் நடைபெற்ற 16 ஒன்றியக் கவுன்சிலர்களுக்கான தேர்தலில் அ.தி.மு.க 6 இடங்களிலும், தி.மு.க 8 இடங்களிலும், அ.ம.மு.க மற்றும் தே.மு.தி.க தலா ஓர் இடத்திலும் வெற்றி பெற்றிருந்தனர். 

அ.ம.மு.க ஆதரவுடன் பெரியகுளத்தைக் கைப்பற்ற தி.மு.க திட்டமிட்ட நேரத்தில், ஜெயமங்கலம் தி.மு.க ஒன்றியக் கவுன்சிலர் செல்வம், ஓ.பன்னீர்செல்வத்தைச் சந்தித்து அ.தி.மு.க-வில் இணைந்தார்.

தொடர்ந்து இரண்டு முறை தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் நேற்று மூன்றாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், சின்னமனூர் பார்முலாவைப் பயன்படுத்தி, அ.தி.மு.க பக்கம் சாய்ந்த தி.மு.க கவுன்சிலர் செல்வத்திடம் பேச்சுவார்த்தை நடத்துகிறது தி.மு.க. மேலும், அ.தி.மு.க கவுன்சிலர்கள் யாரையாவது தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியிலும் தி.மு.க தீவிரம் காட்டிவருகிறது.

``சின்னமனூரை தி.மு.க கைப்பற்றியது ஓ.பன்னீர்செல்வத்தை அப்செட் ஆக்கியது. தனது பக்கம் வந்த ஒரு கவுன்சிலரை கைவிட்டுப் போகச் செய்ததால், கோபமடைந்தார். இதேபோல பெரியகுளத்தில் நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என நிர்வாகிகளிடம் கூறியிருக்கிறார். ஆனால், தி.மு.க சத்தமில்லாமல் காய் நகர்த்திவருகிறது. பெரியகுளத்தை ஓ.பி.எஸ் தக்கவைப்பார் என்பது கொஞ்சம் சந்தேகம் தான்!” என்கின்றனர் தகவலறிந்த வட்டாரங்கள்!

Post a Comment

0 Comments