உங்களது பான் எண்ணை ஆதார் உடன் இணைத்து விட்டீர்களா? இல்லைனா ஆபத்து உங்களுக்கு தான்!


உங்களது பான் எண்ணை ஆதார் அட்டையும் உடன் இணைத்து விடடீர்களா? இந்த செயல்முறை முடித்தவர்கள் தப்பித்தார்கள் என்றுதான் கூறவேண்டும். ஒருவேளை இன்றுவரை ஒன்னும் நாங்கள் லிங்க் பண்ணலப்பா என்பவர்களுக்கு தான் இந்த செய்தி தொகுப்பு.

அதாவது உங்கள் பான் எண்ணை பெர்மனென்ட் அக்கவுண்ட் நம்பரை ஆதார் அட்டையுடன் இணைப்பதற்கான காலக்கெடுவானது வரும் மார்ச் 31-ம் தேதியோடு முடிவடைகிறது. ஆனால் இதற்குமுன் 2019-ம் ஆண்டின் டிசம்பர் 31-ம் தேதிக்குள் அவரவர் ஆதார் எண்ணுடன் அவரவர் பான் எண் இணைக்காவிட்டால் குறிப்பிட்ட பான் கார்டுகள் முடக்கப்படும் என அரசு அறிவித்திருந்தது.

இதுதான் கடைசியா

தற்சமயம் அந்த கெடு மார்ச் 31-க்குள் என்று மாற்றியமைக்கப்பட்டுள்ளது, மீண்டும் மாற்றி அமைக்கப்படுமா அல்லது இதுதான் கடைசியா என்பது தெளிவாக தெரியவில்லை, இருந்தபோதிலும் உடனே லிங்க் செய்து கொள்வதுதான் நல்லது.

Income Tax e-filing வலைத்தளம் ஒருவேளை நீங்கள் பான் மற்றும் ஆதார் ஆகியவற்றை இணைக்கவில்லை என்றால், அவைகளை இணைப்பதற்கு இரண்டு அருமையான வழிகள் உள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஒன்று, அதார்-பான் இணைப்பை வருமான வரித்துறையின் Income Tax e-filing வலைத்தளம் மூலம் இணைக்கலாம்.

இதையும் படிக்க: கவர்ச்சியாக மாறிய டிடி!

எஸ்எம்எஸ் அனுப்புவதின் மூலமாகவும் இணைக்கலாம்:

இரண்டாவது வழி 567678 () 56161 என்கிற எண்ணிற்கு எஸ்எம்எஸ் அனுப்புவதின் மூலமாகவும் இணைக்கலாம். இதை எப்படி செய்வது என்று விரிவாக பார்ப்போம் வாங்க...

வருமான வரித்துறையின் வலைதளம் வருமான வரித்துறையின் வலைதளம் மூலம் பான் எண் மற்றும் ஆதாரை இணைப்பது எப்படி? என்று பார்ப்போம் 

வழிமுறை-1: 

முதலில் ஆன்லைன் வழியாக வருமான வரித்துரையில் அதிகாரபூர்வமான -ஃபில்லிங் வலைத்தளத்திற்குள் (https://www.incometaxindiaefiling.gov.in)செல்ல வேணடும்

வழிமுறை-2 :

அடுத்து வலைதளத்தின் இடது பக்கதில் உள்ள Link Aadhaar எனும் விருப்பத்தை தேர்வு செய்யவும்

வழிமுறை-3 

அதன்பின்பு உங்களிக் பான் மற்றும் ஆதார் விவரங்களை கேட்குமொரு பக்கத்திற்குள் நுழைவீர்கள். அங்கே பான், ஆதார் எண் மற்றும் ஆதாரில் குறிப்பிட்டுள்ளதை போன்ற பெயர் போன்ற விவரங்களை பதிவிட வேண்டும்.

வழிமுறை-4 

பின்னர் I have only year of birth in Aadhaar card என்ற விருப்பமும், அதன் அருகில் ஒரு டிக் பாக்ஸ் ஒன்றும் இருக்கும். இது உங்களின் ஆதார் அட்டையில் நீங்கள் பிறந்த ஆண்டு மட்டுமே குறிப்பிடப்பட்டு இருப்பின் அந்த டிக் பாக்ஸை கிளிக் செய்தல் வேண்டும்

வழிமுறை-5 

அதன்பின்பு வலைதள பக்கத்தில் இருக்கும் Captcha code- நிரப்பவும், பின்னர் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு ஒடிபி ஒன்றை அனுப்பச் சொல்லியும் நீங்கள் கோரிக்கை விடுக்கலாம். கடைசியாக எல்லாம் முடிந்த பின்னர் Link Aadhaar என்பதை கிளிக் செய்தல் வேண்டும்.

எஸ்எம்எஸ் மூலம் இணைக்க வழிமுறை எஸ்எம்எஸ் மூலம் பான் எண் மற்றும் ஆதாரை இணைக்க வழிமுறைகளைப் பார்ப்போம்.

வழிமுறை-1 

முதலில் ஆதார் உடன் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 567678 அல்லது 56161 க்கு எஸ்எம்எஸ் அனுப்புவதன் வழியாக கூட நீங்கள் உங்களின் பான்-ஆதார் இணைப்பை நிகழ்த்தலாம்

வழிமுறை-2 

அவ்வாறு செய்யவேண்டும் என்றால், நீங்கள் UIDPAN என்று டைப் செய்து சிறுதி இடைவெளி விட்டு 12 இலக்க ஆதார் எண்ணை டைப் செய்து இடைவெளி விட்டு பின்னர் 10 இலக்க பான் எண்ணை டைப் செய்து மேலே குறிப்பிட்டுள்ள எண்ணில் எதாவது ஒன்றிக்கு எஸ்எம்எஸ் செய்தல்வேண்டும். இதன் மூலம் பாண் மற்றும் ஆதாரை இணைக்க முடியும்.

Post a Comment

0 Comments