தனுஷ் நடிக்கும் புதுப்பேட்டை 2 பாகம். அதிகாரபூர்வ அறிவிப்பு:

ஏற்கனவே தனுஷ் வடசென்னை படத்தின் 2-ம் பாகத்தில் நடித்துள்ளதால், புதுப்பேட்டை 2-ம் பாகம் உருவாகுமா? என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
சில வாரங்களுக்கு முன்பு செல்வராகவன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் அடுத்த படத்துக்கு தயாராகி விட்டதாகவும், படத்துக்கான கதையை எழுத தொடங்கி விட்டதாகவும் குறிப்பிட்டு இருந்தார். அது புதுப்பேட்டை இரண்டாம் பாகமா? ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகமா? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.

இந்த நிலையில் தனுசை வைத்து புதுப்பேட்டை 2-ம் பாகம் படத்தை இயக்க இருப்பதாக செல்வராகவன் தற்போது அறிவித்து உள்ளார். இது தனுஷ் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.


இவர் காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, இரண்டாம் உலகம் என்று வித்தியாசமான கதையம்சம் உள்ள படங்களை கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சூர்யாவை வைத்து இயக்கிய என்.ஜி.கே. படம் கடந்த வருடம் மே மாதம் திரைக்கு வந்தது. தனுஷ் தற்போது கர்ணன், மற்றும் இந்தியில் அத்ரங்கி ரே ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்களை முடித்த பிறகு புதுப்பேட்டை 2-ம் பாகத்துக்கு வருகிறார்.

Post a Comment

0 Comments