கொரோனா வைரஸ் பாதிப்பு: அரசின் மீது ராகுல்காந்தி குற்றசாட்டு

சீனாவின் உகான் நகரில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பீதியை ஏற்படுத்தி இருக்கிறது. உயிர்க்கொல்லியான இந்த வைரஸ் 160-க்கும் மேற்பட்ட நாடுகளை தாக்கி உள்ளது. 

சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி, ஈரான், ஸ்பெயினில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.  இந்தியாவில்  இதுவரை  150 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 
இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தனது டுவிட்டரில்

கொரோனா வைரஸைக் கையாள்வதற்கு விரைவான ஆக்கிரமிப்பு நடவடிக்கை தேவை. இல்லை என்றால் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு எதிராக மத்திய அரசின் செயல்பட முடியாத  தன்மைக்கு இந்தியா மிக அதிக விலை கொடுக்கப்போகிறது  என கூறி உள்ளார்.

Post a Comment

0 Comments