நம்முடைய ஒரே டார்கெட் ஸ்டாலின் தான்! தனுஷ் வீட்டில் ரஜினியை சந்தித்த அன்புமணி பேட்டி!


நடிகர் தனுஷின் வீட்டில் நடிகர் ரஜினிகாந்தை பாமக எம்.பி. அன்புமணி ராமதாஸ் அணையில் சந்தித்து பேசியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இச்சந்திப்பின் போது திமுகவை வீழ்த்த இருவரும் ஒருங்கிணைந்து செயல்படுவது என முடிவெடுத்துள்ளனராம்


ரஜினிகாந்தை பொதுமேடைகளில் பாமக பேசாத வார்த்தைகளே இல்லை. ரஜினிகாந்தின் பாபா படம் வெளியானபோது அதை திரையிடமுடியாமல் அவர் பட்டபாடு பெரும்பாடு. வடமாவட்டங்களின் முந்திரிக் காடுகளில் பாபா திரைப்படப் பெட்டியை பாமகவினர் பதுக்கி வைத்தது வரலாறு. அதே ரஜினிகாந்தும் பாமகவும்தான் இன்று நண்பேன்டாவாகி இருக்கிறார்கள் அரசியலில்!

ரஜினியுடன் பாமக கூட்டணி:

ரஜினிகாந்த் தொடங்கப் போகும் அரசியல் கட்சியின் பிரதான கூட்டணி கட்சியாக பாமக இருக்கும் என்று தமிழருவி மணியன் கூறினார். ஆனால் இதனை பாமக நிரகாரிக்கவே இல்லை. இதனால் பாமகவை கூட்டணியில் தக்க வைக்க அதிமுக தீவிரம் காட்டி வருகிறது.

ரஜினியை சந்தித்த அன்புமணி:

இந்நிலையில் சென்னையில் நடிகர் தனுஷ் வீட்டில் ரஜினிகாந்தை பாமக இளைஞரணி தலைவரும் எம்பியுமான அன்புமணி சந்தித்து பேசியுள்ளார்

இச்சந்திப்பின் போது சட்டசபை தேர்தலில் இரு கட்சிகளும் இணைந்து செயல்படுவது குறித்து விவாதித்துள்ளனர். மேலும் திமுக தலைவர் ஸ்டாலினை ஆட்சிக்கு வர விடாமல் எப்படியும் தடுக்க வேண்டும் என்பதுதான் இருவரது ஒற்றை இலக்காகவும் முன்வைக்கப்பட்டது.

ரஜினி அன்புமணி சபதம்: 

வடதமிழகத்தில் பாமகவும் ரஜினி கட்சியும் இணைந்து முழுமையாக செயல்பட்டால் திமுகவால் ஆட்சி அமைக்கவே முடியாது

இதை எப்படியும் நிறைவேற்றியாக வேண்டும் என்று இருவரும் சபதம் எடுத்தது போல் பேசியுள்ளனர். இந்த சந்திப்புக்குப் பின்னர்தான் மதத்தை வைத்து அரசியல் செய்யக் கூடாது என பாஜகவை விமர்சிப்பது போல திமுகவையும் சாடினாராம் ரஜினிகாந்த்.

ரசிகர்களுக்கு தகவல்:

சென்னையில் நாளையும் நாளை மறுநாளும் நடைபெறும் ரஜினிகாந்தின் மக்கள் மன்ற செயலாளர்கள் கூட்டத்திலும் பாமகவுடனான கூட்டணி குறித்து ரஜினி கோடிட்டு காட்டிப் பேச இருக்கிறாராம்

இதனால் வடதமிழகத்தில் இப்போது இருந்தே இரு கட்சிகளிடையேயும் இணக்கமான சூழ்நிலை உருவாகும் என்பதுதான் எதிர்பார்ப்பாம்.

Post a Comment

0 Comments