ரஜினி கட்சியின் பெயர் வெளியீடு! அதிரடி காட்டிய ரஜினி.


'தமிழகத்தில், 2021ல், நடக்க உள்ள சட்டசபை தேர்தலில் போட்டியிடுவோம்' என, அறிவித்துள்ள நடிகர் ரஜினி, அடுத்த மாதம், கட்சி பெயரை அறிவிக்க உள்ளார். இதற்கான முன்னேற்பாடுகளில், ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் ஈடுபட்டு உள்ளனர்.


திரைமறைவில், கூட்டணி குறித்தும், துாதர்கள் வாயிலாக, பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகளுடன் பேச்சு நடத்தப்பட்டு வருகிறது. மத்திய அரசுக்கு ஆதரவாக பேசி வந்த ரஜினி, 'டில்லியில் நடந்த வன்முறைக்கு, மத்திய உள்துறை அமைச்சகமும், உளவுத்துறை தோல்வியும் தான் காரணம்' என, காட்டமாக பேட்டி அளித்தார்


மேலும், 'குடியுரிமைத் திருத்தச் சட்டம் தொடர்பாக, மக்களிடையே ஏற்பட்டுள்ள அச்சத்தை போக்கத் தயார்' என்றும் அறிவித்தார். இதைத் தொடர்ந்து, முஸ்லிம் அமைப்புகள், மத குருமார்களையும் அழைத்து பேசி வருகிறார்.

அரசியல் கட்சி பெயரை அறிவிப்பதற்கான முதற்கட்ட பணிளை, ரஜினி துவக்கி உள்ளார். இதன் ஒரு பகுதியாக, சென்னை, கோடம்பாக்கத்தில் உள்ள, ராகவேந்திரா மண்டபத்தில், நாளை காலை, 10:00 மணிக்கு, ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலர்கள் கூட்டத்தை கூட்டி, அவர் ஆலோசிக்க உள்ளார். இதைத் தொடர்ந்து, கட்சி அறிவிப்புக்கான செயல்பாடுகள் வேகம் எடுக்கும் என, தெரிகிறது.

Post a Comment

0 Comments