ரஜினி அரசியல் வருகை குறித்து முக்கிய முடிவு!

கடந்த பல வருடங்களாக ரஜினி ஆட்சிக்கு வர வேண்டும் என்பது அவரது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது. இந்த நிலையில் இன்று தமது கட்சியின்  மாவட்ட நிர்வாகிகளை சந்தித்தார் ரஜினி. இந்தக் கூட்டத்தில் தமது அரசியல் வருகை குறித்து முக்கிய முடிவு எடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் அந்நிகழ்ச்சியில் பேசிய ரஜினி "அரசியல் வருகை என்பது தெளிவாக இருக்க வேண்டும் இல்லையென்றால் மீன் குழம்பு வெச்ச பாத்திரத்துல சக்கரை பொங்கல் சமைச்சா மாதிரி ஆகிடும். எனக்கு முதல்வர் ஆசை எப்பவும் இருந்ததில்லை. ரஜினி மக்கள் மன்றத்தில் இளைஞர்களுக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கப்படும்" என்றும் கூறியுள்ளார்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் ரஜினி வரிசையாக பல 'பன்ச்' டையலாக்களை அள்ளி வீசினார். அப்படி அவர் பேசிய சில குறிப்பிடத்தகுந்த வசனங்கள் இதோ.

"மீன் குழம்பு வெச்ச பாத்திரத்துல சக்கரைப் பொங்கல் மாறி"

"சும்மா ரஜினி CM..CM... இந்தப் பேச்சை நிறுத்துங்க முதல்ல..."

"இந்த பூமி, நம்ம தமிழ்நாடு புரட்சிகளுக்கு பெயர் போன பூமி"  

"தமிழக அரசியலில் மிகப் பெரிய வெற்றிடம் இருக்கு.. ரெண்டு பெரிய ஆளுமைகள் இப்போ இல்லை"

"மிகப் பெரிய புரட்சி உண்டாகனும்.. அப்புறம் இந்த ஜாம்பவான்கள், பணம், பேரு எதுவும் நிக்காது..தூள் தூளாகிடும் "

"ஆட்சிக்கு வந்தால், கட்சிப் பதவியை தொழிலாக செய்கிறார்கள்"

"கட்சிக்கு நான் தலைவர்; முதலவர் இல்லை"

Post a Comment

0 Comments