சிம்பு நடிக்கும் மாநாடு படத்தின் ஷூட்டிங் குறித்து முக்கியமான தகவல் தெரிய வந்துள்ளது.

சிம்பு நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் மாநாடு. வெங்கட் பிரபு இத்திரைப்படத்தை இயக்குகிறார். கல்யாணி ப்ரியதர்ஷன் கதாநாயகியாக நடிக்கிறார். 

மேலும் பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர், ப்ரேம்ஜி, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தின் ஷூட்டிங் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.


இந்நிலையில் மாநாடு படத்தின் ஷூட்டிங் குறித்து முக்கியமான தகவல் தெரிய வந்துள்ளது. சென்னை விஜிபியில் நடைபெற்று வந்த மாநாடு படத்தின் இரண்டாவது ஷெட்யூல் நேற்றோடு நிறைவடைந்துவிட்டதாக கூறப்படுகிறது. 

இதையடுத்து அடுத்தக்கட்ட ஷூட்டிங்கிற்காக படக்குழு ஹைதராபாத் செல்வதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. திங்கள் முதல் இந்த ஷூட்டிங் தொடங்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.