சர்க்கரைக்கு பதிலாக வெல்லத்தை சேர்த்துக் கொள்வதால் கிடைக்கும் நன்மைகள். (sugar vs jaggery in tamil)


பண்டிகை காலங்களில் மட்டும்தான் வெல்லம். மற்ற நேரங்களில் சர்க்கரை தான் என்று சொல்பவர்கள் முதலில் தெரிந்து கொள்ள வேண்டிய து வெல்லத்தின் பயன்பாடுதான். பாரம்பரிய இனிப்பு என்றாலே வெல்லம் சேர்க்கப்பட்ட உணவுதான்..

சர்க்கரைக்கு பதிலாக வெல்லத்தை சேர்த்துக் கொள்வது உடலுக்கு ரொம்ப நல்லது. இதை பெரும்பாலானோர் நிறைய பேர் சொல்லி தெரிந்திருக்க வாய்ப்புகள் அதிகம்
Sugar vs Jaggery in tamil
Sugar vs Jaggery in tamil
ஆனால், எந்த வகையில் இது உடலுக்கு நல்லது. சர்க்கரையுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது, இதில் அப்படி என்ன இருக்கிறது? இவை அனைத்துமே அனைவரது மனதிலும் ஓடக் கூடிய சில அடிப்படை சந்தேகங்கள். இவற்றிற்கான விடையை தான் இப்போது தெரிந்து கொள்ள போகிறோம்.(sugar vs jaggery in tamil)

ஊட்டச்சத்து நிபுணர் கூற்று... சான்றளிக்கப்பட்ட ஊட்டச்சத்து நிபுணரும், யூடியூபருமான கௌரவ் தனேஜா கூறுவது என்றவென்றால், வெல்லமானது, நமது உடலை நச்சு பொருட்களிடம் இருந்து காத்து, சளி மற்றும இருமல் தொல்லை நெருங்காமல் பாதுகாக்கும்


அதுமட்டுமல்லாது, உடலில் இரும்புச்சத்தை சமன்படுத்த உதவும். மிக முக்கியமாக, இரத்த அழுத்தம் உள்ளவர்கள் மற்றும் நீரிழிவு நோயாளிகள் கூட குறிப்பிட்ட அளவு இதனை சேர்த்துக் கொள்ளலாம். (sugar vs jaggery in tamil)

வெல்லம் நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும். இதுவே, சர்க்கரையில் கொழுப்பு கலோரிகள் உள்ளதால் அவை உடல் எடையை அதிகரிக்க செய்துவிடும்


வெல்லம், சர்க்கரை இரண்டிலுமே கலோரிகள் இருந்தாலும், வெல்லம் தான் இயற்கை முறையிலான சர்க்கரையாகும். சர்க்கரை, வெல்லம், இரண்டில் எதை அதிகமாக சாப்பிட்டாலும், உடல் எடை அதிகரித்துவிடும் என்பதை மட்டும் மறக்க வேண்டாம்
Sugar vs Jaggery in tamil
Sugar vs Jaggery in tamil
ஆனால், வெல்லத்தில் ரசாயனங்கள் எதுவும் இல்லாததால், உடலுக்குள் வேறு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது. எனவே, ஒட்டுமொத்தமான வெல்லம் உடலுக்கு நன்மை தான், அதுவும் சரியான அளவில் சேர்த்துக் கொள்ளும் போது மட்டும் தான். ஏனென்றால், அளவிற்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு தானே.(sugar vs jaggery in tamil)

எவ்வளவு வெல்லம் உட்கொள்ளலாம்

வெல்லத்தில் உள்ள அதிகப்படியான மக்னீசியம், குடலுக்கு வலு சேர்க்க உதவும். ஒவ்வொரு 10 கிராம் வெல்லத்தில், சுமார் 16 மி.கி. அளவிற்கு மக்னீசியம் உள்ளது

இது தினசரி உடலுக்கு தேவையான தாதுக்களில் 4 சதவிகிதம் ஆகும். நிறைய வல்லுநர்கள் ஒப்புக்கொண்டதன் அடிப்படையில், ஒரு ஆரோக்கியமான மனிதர், நாளொன்றிற்கு 25 கிராமிற்கு அதிகமாக எடுத்துக் கொள்ளவே கூடாது. சிறந்த அளவு என்னவென்றால், 10 முதல் 15 கிராம் வரை தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஆயுர்வேதம் கூறுவது:

ஆயுர்வேதத்தின் அடிப்படையில், நீரிழிவு நோய் உள்ளவர்கள், 5 கிராம் வரையில் வெல்லம் சேர்த்துக் கொள்ளலாம். உடல் நலக்குறைவு உள்ளவர்கள், புதிதாக எதை உணவில் சேர்த்துக் கொள்வதற்கு முன்பும் உங்களது மருத்துவரின் அறிவுரையையும், அனுமதியையும் பெறுவது சிறந்தது. முக்கியமான ஒன்று, உபயோகிக்கும் வெல்லத்தின் தரம். வெல்லம் வாங்கும் போது கலப்படமில்லாத சுத்தமான வெல்லத்தையே தேர்ந்தெடுத்து வாங்க வேண்டும்.(sugar vs jaggery in tamil)

வெல்லம் கொண்டு டீ தயாரிப்பது எப்படி

வாழ்க்கை முறை மாற்றமாக, சர்க்கரையை தவிர்த்து, வெல்லத்தை பயன்படுத்தி டீ சாப்பிட முடிவெடுத்தவர்களுக்கு பயன்படும் வகையில், வெல்லத்தை பயன்படுத்தி டீ போடுவது எப்படி என்பதை இப்போது தெரிந்து கொள்வோம்.... 

Jaggery tea in Tamil
Jaggery tea in Tamil
  • டீ போடுவதற்கு முதலில், ஒரு கப் தண்ணீரை கொதிக்க வைக்கவும்
  • அத்துடன், இஞ்சி, பொடித்த வெல்லம் மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து கொதிக்க விடவும். (sugar vs jaggery in tamil)
  • வெல்லம் தண்ணீரில் முழுவதுமாக கரைந்த பின்னர் டீத்தூளை சேர்க்கவும்.
  • இந்த கலவை நன்கு கொதித்த பின்னர், அத்துடன் பால் சேர்க்கவும்.
  • இப்போது அதனை 5 நிமிடங்களுக்கு நன்கு கொதிக்க விட்டு, பின்னர் இறக்கி சூடாக பரிமாறவும்.

வெல்லத்தை எப்படி எடுத்துகொள்ளலாம்:

தினமும் 10 கிராம் அளவு வெல்லம் உடலுக்கு சேர்த்துகொள்ளலாம். தினமும் டீ, காபி போன்ற பானங்களில் சர்க்கரைக்கு பதிலாக வெல்லம் சேர்த்துகொள்ளலாம். இனிப்பு வகைகளை எடுத்துகொள்ளும் போது சர்க்கரை கலந்த இனிப்பை விட வெல்லம் கலந்த இனிப்பை எடுத்து கொள்வது நல்லது.(sugar vs jaggery in tamil)


வீட்டில் இனிப்பு வகைகளை தயாரிக்கும் போதும் சர்க்கரைக்கு பதிலாக வெல்லம் சேர்த்துவந்தாலே உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். பழச்சாறுகளிலும் நாட்டுச்சர்க்கரை பயன்படுத்துங்கள்.குழந்தைகளுக்கு வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக தரமான நாட்டுச்சர்க்கரையை கலந்து கொடுத்து பழகுங்கள்.


Post a Comment

0 Comments