TrueCaller App பயன்படுத்துவதால் இவளோ ஆபத்தா? தெரிந்து கொள்ளுங்கள்!


நம்மில் பெரும்பாலானோர் Truecaller என்ற பயன்பாட்டுச் செயலியை நமது ஸ்மார்ட்போனில் பயன்படுத்தி வருகிறோம். இந்த பயன்பாட்டை உலகளவில் சுமார் 15 மில்லியன் பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதற்கான முக்கிய காரணம் உங்களுக்குத் அடையாளம் தெரியாத எண்ணிலிருந்து அழைப்பு வந்தால், அந்த நபர் யார்? எங்கிருந்து அழைக்கிறார் என்று அவரின் அனைத்து தகவலையும் இந்த செயலி சொல்லிவிடும்.

ட்ருகாலர் (Truecaller) செயலி:

ட்ருகாலர் (Truecaller) செயலி ஆண்ட்ராய்டு மற்றும் iOS என இரண்டு தளங்களிலும் இலவசமாகக் கிடைக்கிறது. இலவச வெர்ஷன் மற்றும் ப்ரோ வெர்ஷன் என்ற கட்டண வெர்ஷனும் ட்ருகாலர் செயலியில் உள்ளது. ட்ருகாலர் ப்ரோ வெர்ஷனின் கீழ் பயனர்களுக்கு இன்னும் அதிகமான பல புதிய சேவைகளை இந்நிறுவனம் வழங்கிவருகிறது.

எப்போதாவது இதை யோசித்தது உண்டா? உங்களுக்குத் தெரியாத நபரின் விபரங்களை மிகத் துல்லியமாக இந்த பயன்பட்டு செயலி எப்படித் தெரிவிக்கிறது என்று யோசித்தது உண்டா? அந்த முகம் தெரியாத, பெயர் தெரியாத எண்ணிற்குச் சொந்தக்காரர் யார் என்ற தகவலை இந்த ட்ருகாலர் நிறுவனத்திற்கு யார் வழங்கி இருப்பார்கள் என்று எப்போதாவது யோசித்தது உண்டா?

பெர்மிஷன் ஆக்ஸஸ்: 

இந்த அனைத்து கேள்விகளுக்கான பதில், TrueCaller App நிறுவனத்தின் பிரைவசி பாலிசியில் தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளது. ட்ருகாலர் ஆப்- உங்கள் ஸ்மார்ட்போனில் நீங்கள் பதிவிறக்கம் செய்யும் பொழுது, பெர்மிஷன் ஆக்ஸஸ் தர வேண்டும், இந்த பெர்மிஷன் ஆக்ஸஸை நீங்கள் தரவில்லை என்றால் ட்ருகாலர் பயன்பாட்டை நீங்கள் பயன்படுத்த முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

ட்ருகாலரின் உண்மையான சூட்சுமம்:

ட்ருகாலர் நிறுவனத்தின் உண்மையான சூட்சுமம் இங்கே தான் ஒளிந்துள்ளது. இந்த பெர்மிஷன் ஆக்ஸஸை நீங்கள் வழங்கியதும் இந்த செயலி உங்கள் Contact List, Call History மற்றும் Messeges Data போன்ற அனைத்து தகவல்களையும் எடுத்துக்கொள்கிறது. இந்த அனைத்து தகவல்களும் TrueCaller சர்வரில் சேமித்து வைக்கப்படுகிறது. அங்கிருந்து தான் மற்றவர்களுக்கு தகவல் கொடுக்கப்படுகிறது.

அனைவரின் தகவலும் சர்வரில் உள்ளது:

சேகரிக்கப்படும் பயனர்களின் தகவல்களை வைத்து தான், தெரியாத நபர்களின் விபரங்கள் நமக்கு வழங்கப்படுகிறது. அதேபோல், நம் எண்ணை வைத்து நம் அடையாளங்களைத் தேடும் நபர்களுக்கும் இப்படி தான் தகவல் கொடுக்கப்படுகிறது. ட்ருகாலர் பயன்படுத்தும் பயனர்களின் மொபைல் IP விலாசம், மொபைல் மாடல் எண் மற்றும் அடையாள எண், கால் ஹிஸ்டரி, மெசேஜ் அனைத்தும் ட்ருகாலர் சர்வரில் இப்போது உள்ளது.

இதை உடனே செய்யுங்கள் நம் தகவல்களை ஒரே ஓரு பெர்மிஷன் கிளிக்கில் நம்மிடமிருந்து பெற்று, அவர்களின் சர்வரில் சேமித்துக்கொண்டார்கள். அதை அழிக்க ஒரு எளிய வழி உள்ளது, இதைச் செய்ய நீங்கள் https://www.truecaller.com/unlisting என்ற இந்த லிங்க்- கிளிக் செய்ய வேண்டும். பிறகு, உங்கள் மொபைல் எண்ணைக் கொடுத்து, உங்கள் தகவல்களை TrueCaller சர்வரில் இருந்து நீக்கம் செய்துகொள்ளலாம்.

தேவையில்லாத ஆப்ஸ்களை பதிவிறக்கம் செய்யாதீர்கள்: 

இந்த பயன்பாட்டுச் செயலி மட்டுமின்றி, பயனர்கள் பயன்படுத்தும் பெரும்பாலான பயன்பாடுகள் நம்மிடமிருந்து தகவல்களைப் பெற முயற்சி செய்துகொண்டேதான் இருக்கின்றது. சில பயன்பாடுகள் தேவையில்லாமல் நமது அபகரிக்க முயல்கின்றன. அவற்றையெல்லாம் கவனிக்காமல் பெர்மிஷன் ஓகே கொடுத்துவிடக் கூடாது. முடிந்த வரை தேவையில்லாத, தெரியாத ஆப்ஸ்களை பதிவிறக்கம் செய்யாதீர்கள்.

Post a Comment

0 Comments