வரலட்சுமி சரத்குமார் நடிக்கும் வெல்வெட் நகரம்! முக்கிய தகவல்.


நடிகை வரலட்சுமி சரத்குமார் தனி நாயகியாக நடித்திருக்கும் படம் தான் வெல்வெட் நகரம். இந்த படத்தில் ஒரு துப்பறியும் பத்திரிகையாளராக நடித்து இருக்கிறார். இவர் தனி நாயகியாக நடித்திருக்கும் முதல் படம் இதுதான் . இந்த படத்தை மனோஜ் குமார் நடராஜன் இயக்கி இருக்கிறார்.

இந்த படம் முழுக்க முழுக்க ஒரு க்ரைம் த்ரில்லராக உருவாகியிருக்கிறது. மேலும் இந்த படத்தில் வரலட்சுமியும் ரமேஷ் திலக், அர்ஜாய், கஸ்தூரி, சந்தோஷ் கிருஷ்ணா, மாளவிகா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து உள்ளனர்.

இந்த படத்தின் இரண்டு முன்னோட்டங்கள் மற்றும் ஒரு ஸீனீக் பீக் இதுவரை வெளியாகியுள்ளது. இந்த ஸீனீக் பீக் மற்றும் முன்னோட்டங்களை காணும் போது இந்த வருடத்தின் சிறந்த த்ரில்லர் படமாக வெல்வெட் நகரம் படம் அமைய அதிக வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது. பல ரசிகர்கள் இந்த படத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்

வரலட்சுமி பல்வேறு வேறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் தனி நாயகியாக ஒட்டு மொத்த த்ரில்லர் படத்தை தனது கையில் ஏந்தி நடித்திருப்பது இதுவே முதல்முறை ஆகும்

இதுவும் படம் பெரிய அளவில் எதிர்பார்க்க ஒரு காரணம்.வரலஷ்மி ஒரு நேர்காணலில் கூட இந்த படம் தனது பிறந்தநாள் வாரத்தில் வருவதால் ரசிகர்களுக்கு என் பிறந்தநாள் ட்ரீட்டாக அமையும் என்று கூறியிருந்தார். மேலும் படத்தில் பல சண்டை காட்சிகளில் துணிச்சலுடன் நடித்திருப்பதாக வரலட்சுமி ஒரு பேட்டியின் போது கூறியிருந்தார் .

ஒரு சிறந்த இயக்குனரால் மட்டுமே ஒரு சிறந்த த்ரில்லர் படத்தை இயக்க முடியும் அப்படிபட்ட படமாக வெல்வெட் நகரம் இருக்குமா மனோஜ் குமார் நடராஜன் சரியாக எடுத்திருப்பாரா என்பதே பலரின் எதிர்பார்ப்பு. மேலும் ஒரு த்ரில்லர் படத்திற்கு பின்னணி இசை மிக அவசியமான விசயம்.இந்த படத்திற்கு பின்னணி இசை அமைத்து இருக்கிறார் சரண் ராகவன். முன்னோட்டங்களை பார்த்த பலரும் பின்னணி இசையை தான் குறிப்பிட்டு பேசிவந்தார்கள்.

இந்த படம் ஒரு உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாக்கபட்ட படம் என்று படக்குழுவால் கூறப்பட்டது. படத்தின் பல விசயங்கள் எதிர்பார்பை அதிகபடுத்திய நேரத்தில் இந்த விசயம் இன்னும் படத்தின் மீதுள்ள எதிர்பார்பை ஏற்றியுள்ளது.பல ரசிகர்கள் இந்த படத்திற்காக காத்திருக்கின்றனர்,வெல்வெட் நகரம் படம் வரும் மார்ச் 6 வெளியாக உள்ளது.

Post a Comment

0 Comments