விஜய் சேதுபதி- சிம்பு சேர்ந்து சொன்ன புதிய தகவல்! மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

விஜய் சேதுபதியும் சிம்புவும் சேர்ந்து ரஞ்சித் ஜெயக்கொடியின் புதிய படத்தை பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

புரியாத புதிர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் ரஞ்சித் ஜெயக்கொடி. விஜய் சேதுபதியை வைத்து முதல் படத்தை இயக்கிய இவர், இதையடுத்து ஹரிஷ் கல்யாணை வைத்து இஸ்பேடு ராஜாவும் இதயராணியும் படத்தை இயக்கினார். இத்திரைப்படமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில் தற்போது இவரின் அடுத்த பட அறிவிப்பு வெளியாகியுள்ளது.


நடிகர் விஜய் சேதுபதியும் சிம்புவும் இன்று இப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை வெளியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, வெளியான போஸ்டரில், யாருக்கும் அஞ்சேல் என படத்துக்கு தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. 

பிந்து மாதவி கதாநாயகியாக நடிக்கும் இத்திரைப்படத்தை தேர்ட் ஐ என்டர்டெயின்மெட் நிறுவனம் தயாரிக்கிறது. படம் குறித்த மற்ற அறிவிப்புகள் விரைவில் வெளியாகவுள்ளன.

Post a Comment

0 Comments