பார்வையாளர்கள் வருகையில் புதிய உலக சாதனை நிகழ்த்திய மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதிச்சுற்று!

ஐசிசி மகளிா் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிச் சுற்றில் இந்தியாவை 85 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற ஆஸ்திரேலியா அணி 5-ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.

இரு அணிகளுக்கு இடையிலான இறுதி ஆட்டம் மெல்போா்ன் கிரிக்கெட் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸி. கேப்டன் மெக் லேன்னிங் பேட்டிங்கைத் தோ்வு செய்தாா்.


முதலில் ஆடிய நடப்பு சாம்பியன் ஆஸி. அணி 184/4 ரன்களைக் குவித்தது. பின்னா் ஆடிய இந்திய அணி 99 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இந்நிலையில் புகழ்பெற்ற மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டம் புதிய உலக சாதனை படைத்துள்ளது. 86,174 பேர் இந்த ஆட்டத்தை மைதானத்தில் கண்டுகளித்துள்ளார்கள். ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற எந்தவொரு பெண்கள் விளையாட்டுக்கும் இந்தளவு பார்வையாளர்கள் வருகை தந்ததில்லை. (உலகளவில் கலிபோர்னியாவில் நடைபெற்ற 1999 ஃபிஃபா மகளிர் உலகக் கோப்பைப் போட்டிக்கு 90,815 பேர் வருகை தந்ததே இன்னமும் பெண்கள் விளையாட்டில் உலக சாதனையாக உள்ளது. அதில் அமெரிக்காவும் சீனாவும் மோதின.) 

அதேபோல ஒரு பெண்கள் கிரிக்கெட் ஆட்டத்துக்கு இத்தனை பேர் வருகை தந்ததும் இதுவே முதல்முறை. இதற்கு முன்பு 2009-ல் சிட்னியில் நடைபெற்ற இறுதிச்சுற்றில் 12,717 பேர் வருகை தந்ததே சாதனையாக இருந்தது. அந்த ஆட்டத்தில் நியூஸிலாந்தை இங்கிலாந்து தோற்கடித்தது. 

Post a Comment

0 Comments