உடற்பயிற்சி செய்தால் இவளோ நன்மைகளா? வீட்டில் இருந்தவாறே செய்யும் யோகா!


குளிர்காலத்திற்கு டாடா பைபை சொல்லிவிட்டு, கோடைகாலத்தை வெல்கம் செய்வதற்கான நேரம் வந்துவிட்டது. சோம்பேறிதனத்தை நமக்கு அதிகமாக வழங்கிய குளிர்காலத்தின் பிடியில் இருந்து விடுபட உடலுக்கு அதிகப்படியான உழைப்பை கொடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம்
yoga in tamil
yoga in tamil
 உடல் எடை போடுவதை தடுத்திட, உடற்பயிற்சிக்கு நேரத்தை ஒதுக்கியே ஆக வேண்டும். அதிகமாக உடற்பயிற்சி செய்தால் மட்டும் போதுமா என்ன? அதுமட்டும் போதாது. கொழுப்பு நிறைந்த உணவுகள், ஜங்க் ஃபுட்ஸ் ஆகியவற்றை தவிர்த்தே ஆக வேண்டும்.

இதையும் படிக்க: நீச்சல் உடையில் கீர்த்தி சுரேஷ்:

சாந்தலோனாசனா:
ஹாண்ட் பிளாங் என்று அழைக்கப்படும் இந்த ஆசனத்தை செய்வதன் மூலம் கைகள் வலுபெறுவதோடு, கவனம் மேலோங்கும்
yoga in tamil
Yoga in Tamil
செய்முறை: 
  • முதலில் வயிறு தரையில் படும்படி படுத்துக் கொள்ளவும்.
  • உடலின் பக்கவாட்டில் உள்ளங்கைகளை வைத்து, உடலை மெதுவாக மேல் நோக்கி தூக்கவும்.
  • கால் நுனி மட்டும் தரையில் இருக்க, முட்டி, இடுப்பு, மேல் உடம்பு பகுதிகள் அனைத்தும் மேலே தூக்கி நேராக இருக்கவும். *கால் முட்டிகளை மடக்காமல் நேரே இருக்கவும்.
  • உள்ளங்கைகளை தரையில் வைத்து, கைகளை நேராக நீட்டவும்
  • இதே நிலையில் சிறிது நேரம் அப்படியே இருக்கவும்.

வசிஸ்தாசனா:

இந்த ஆசனமானது, உடலின் மேல் பாகத்தையும், குறிப்பாக இடுப்பு பகுதியையும் வலுவடைய செய்யும்
Yoga in Tamil
Yoga in Tamil
அதுமட்டுமல்லாது, கைகள், மணிக்கட்டுகள் மற்றும் கால்களையும் வலுவாக்கும்

செய்முறை

  • முதலில் பார்த்த சந்தோலானசனா முறையில் நின்று கொள்ளவும்.
  • இப்போது இடது கை, தரையில் இருக்க வலது கையை மட்டும் மேல் நோக்கி நீட்டவும்
  • அடுத்ததாக, மேல் நோக்கி நீட்டிய வலது கையின் விரல்கள் மேல் நோக்கி நீட்டியிருக்கவும்.
  • இப்போது, தலையை திருப்பி வலது கையை பார்க்கவும்.
  • இதே நிலையில் சிறிது நேரம் இருக்கவும்.
  • பின்பு, இதே போன்று இடது பக்கத்தில் செய்யவும்.

தனுராசனா 

சமஸ்கிருதத்தில் இந்த ஆசனத்திற்கு வில் போன்ற ஆசனம் என்ற பொருள். தனுர் என்றால் வில்லை குறிக்கும்

இந்த ஆசனமானது முழு முதுகிற்கும் ஒரு நீட்டிப்பை கொடுத்தும், கால்களை கட்டுப்படுத்தி, பெண்களுக்கு ஏற்படக்கூடிய மாதவிடாய் கால இன்னல்களை நீக்கவும், இனப்பெருக்க உறுப்புகளை தூண்டுவதற்கும் உதவுகிறது

செய்முறை

  • வயிறு தரையில் படும்படி படுத்துக் கொண்டு, கால்களை சற்று விரித்து கொள்ளவும்.
  • கைகள் இரண்டையும் உடலின் பக்கவாட்டில் நீட்டிக் கொள்ளவும்.
  • மெதுவாக கால் முட்டிகளை மடித்து, கைகளை பின்புறமான நீட்டி, கணுக்கால்களை பிடித்துக் கொள்ளவும்.
  • இப்போது மூச்சை உள்வாங்கி, உடலை மேல்நோக்கி தூக்கவும்
  • கால்களும், தலையும் தொட்ட கொள்ள முயற்சிக்கும் படி செய்யவும்
  • முகத்தில் எவ்வித அழுத்தத்தையும் காட்டாது, பார்வை நேராக இருக்க வேண்டும்.
  • சுவாசத்தில் கவனத்தை செலுத்தி எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் அப்படியே இருக்கவும்
  • 15 முதல் 20 வினாடிகள் அழித்து மூச்சு விட்டு, பின்பு உடலையும், கால்களையும் இயல்பு நிலைக்கு கொண்டு வந்து ஓய்வெடுக்கவும்.


Post a Comment

0 Comments