அடேங்கப்பா 3 மாதத்தில் இத்தனை படங்களா?? வியப்பளிக்கும் யோகிபாபு


தமிழில் சுப்ரமணியன் சிவா இயக்கத்தில் வெளிவந்த 'யோகி' என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் யோகி பாபு.
 
Yogi Babu
Yogi Babu 
இவர் இதன்பின் சில படங்களில் சிறிய வேடங்களில் நடித்து வந்தார். இதனை தொடர்ந்து முதன் முறையாக டாப் ஹீரோவுடன் இவர் இணைந்து நடித்த படம் விஜய்யின் வேலாயுதம்.


மேலும் ரஜினி, அஜித், விஜய், விக்ரம், சூர்யா, தனுஷ், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், அருண் விஜய், உள்ளிட்ட பல நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

சமீபத்தில் வெளிவந்த தர்பார் படத்தில் கூட இவரது நகைச்சவை திறன் பாராட்டுக்கூறியதாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இவர் சென்ற இரண்டு வருடத்தில் மட்டும் பல படங்களில் கமிட்டாகி நடித்து வந்தார். ஆனால், தற்போது இவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவு அனைவரையும் ஆசிரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஆம் "கடந்த 3 மாதங்களில் மட்டும் 40 படங்களில் கமிட்டாகியுள்ளது மிக சந்தோஷத்தை தருகிறது" என்று வெளிப்படையாக கூறியுள்ளார் நடிகர் யோகி பாபு.

மேலும் இது எந்த ஒரு நடிகரும் செய்யாத ஒரு சாதனை என்று கூட கூறலாம்.

Post a Comment

0 Comments